சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

12 டிசம்பர், 2013

விழுப்புண்ணடைந்து வறுமையில் வாடும் முன்னாள் போராளிக்கு உதவிக்கரம் நீட்ட முன்வாருங்கள்

தாயக விடுதலைப் போராட்டத்தில் தம்மை முழமையாக அற்பணித்துச் சேவையாற்றிய பலர் இன்று கால்களையும் கைகளையும் உடல் உறுப்புக்களையும் இழந்த நிலையில் சொல்லொணாத்துயரங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.
இந்தவகையில், வன்னி பிரதேசத்தில்  வசித்துவருகின்ற தெய்வேந்திரம் என்ற முன்னாள் போராளி தற்பொழுது தனது இடதுகையை இழந்தநிலையில் இருகால்களும் ஊனமாக்கப்பட்ட நிலையில் எழும்பி நடக்கமுடியாதவராக செயலிழந்துபோயுள்ளார்.

இதேவேளை இவருடைய மனைவியும் பாரிசவாத நோயனால் பாதிக்கப்பட்டு தற்போதும் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை செலவுகளை கூட செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.  இவர்கள் இருவரும் எற்தவெரு வருமானமுமின்றி தமது இரு குழந்தைகளையும் வளர்க்கவே முடியாதவர்களாக பாதிப்படைந்துள்ளனர்.
போரின் வடுக்களை தன்னில் சுமந்துகொன்டிருக்கின்ற இந்த தமிழனின் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கும் கொடையாளிகள் முன்வரவேண்டும்.
இவருடைய முழுமையான விபரத்தினையும் அவர் எழுதிய கடிதத்தையும் இத்துடன் இணைத்துள்ளோம். அவருடைய தற்போதய வாழ்விடம் அவருடைய மனைவி, பிள்ளைகளின் புகைப்படங்கள் என்பனவற்றினையும் இத்துடன் இணைத்துள்ளோம். 
தயவுசெய்து இவருக்கு உதவிசெய்ய முன்வருமாறும் கோரக்கை விடுக்கின்றோம்.
யாரும் அவர்களிற்கு உதவும் பட்சத்தில் அவரின் தொடர்புகள் உங்களிடம் நேரடியாகவே தரப்படும்.

தொடர்புகளிற்கு-
ttnnews08@gmail.com
RAM 00447448452286


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக