ஸ்கைப் இணையத்தளம் மூலம் இளம் பெண்களுடன் காதல் தொடர்புகளை ஏற்படுத்தி,
அவர்களை நட்சத்திர விடுதிகளுக்கு அழைத்துச் சென்று, பாலியல் துஷ்பிரயோகம்
செய்து, அந்த பெண்களை கைவிட்ட சுவிடன் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக
பணியாற்றி வரும் இலங்கையர் ஒருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால்
கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், மருத்துவரான தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் சுவிடனில் வசித்து வருவதுடன், கடந்த 04 வருடங்களாக சந்தேச நபர் ஸ்கைப் மூலம் பெண்களை இவ்வாறு ஏமாற்றி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் சுவிடனில் இருந்து ஸ்கைப் மூலம் இலங்கையில் உள்ள செல்வந்த
குடும்பங்களை சேர்ந்த இளம் பெண்ளுடன் தொடர்பு கொண்டு, அவர்களை காதல்
வலையில் வீழ்த்தியுள்ளார். சில மாதங்கள் விடுமுறையில் இலங்கை வரும் இந்த
சந்தேக நபர் தன்னுடன் தொடர்பு வைத்துள்ள பெண்களை விடுதிகளுக்கு அழைத்துச்
சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
இதனை ரகசியமான முறையில் வீடியோவில் பதிவு செய்து அந்த நபர், அதனை
பகிரங்கப்படுத்த போவதாக கூறி, அந்த பெண்களை பல்வேறு வகையில் பாலியல்
துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தி வந்துள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து வரும் அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட
பெண்கள் அது குறித்து காவற்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். சந்தேக
நபரினால் பாதிக்கப்பட்ட உயர் பாடசாலை ஒன்றின் இளம் ஆசிரியை ஒருவரிடம்
இருந்து கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, விசாரணைகளை நடத்திய அதிகாரிகள்
முதலில், சந்தேக நபரின் சாரதியை கைதுசெய்தனர்.
இதன் பின்னர், சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் பல பெண்களை இவ்வாறு துஷ்பிரயோகம்
செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக