சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

15 நவம்பர், 2013

சனல் 4- ன் இயக்குனர் கல்லாம் மேக்ரோ-வை இலங்கையில்கொலை செய்ய அரசின் சதி அம்பலம்

சேனல்-4, இலங்கையின் இனவெறி செயல்களை உலகறிய செய்த சேனல். இந்த சேனல் அலைவரிசைக்கு தடைவிதித்தால் மேலும் பெரிய பிரச்சனை எழும் என்பதால் இலங்கை அரசு ஏதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
லண்டனில் இருந்து கொண்டே இலங்கைக்கு பெரிய குடைச்சலை கொடுத்த சேனல் இது. உள்நாட்டிற்குள் வந்தால் சும்மா இருப்பார்களா என்ன? கல்லம் மேக்ரோ தலைமையில் புலிகளுடன் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற தளங்களுக்கு சென்று இலங்கை அரசு செய்த போர்குற்றங்களுக்கான ஆதாரங்களை சேகரிக்க திட்டமிட்டுள்ளனர்.
எனவே இதை அறிந்து கொண்ட ராஜபக்சே அரசு உடனே சிங்களவர்களை சேனல்-4க்கு எதிராக ஆர்பாட்டங்களை நடத்த சொல்லி ஏவி விட்டது. மேலும் கல்லம் மேக்ரோ சென்ற வாகனத்தையும் தடுத்து கோஷமிட்டனர். இதனால் கல்லம் மேக்ரோ உடனடியாக தனது இருப்பிடத்திற்கு திரும்பினார். புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என பலத்த கோசங்களை எழுப்பினர்.
மேலும் இன்று மாலை ஒரு சிங்களவர் தனது வண்டியை எடுத்துக்கொண்டு சிங்களவர்களிடம் வீதி வீதியாக சென்று சேனல்-4 இயக்குனர் நம் ஒற்றுமையை கெடுக்கிறார் என்றும் அவரை உயிரோடு விட்டால் நாட்டின் அமைதியை சீர்குலைத்துவிடுவார் என கூறி மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டமுற்பட்டுள்ளார். இரவோடு இரவாக ஒரு மாபெரும் பேரணியை நடத்தி அதை கலவரமாக மாற்றி சேனல்-4 மற்றும் சில அரசுக்கு எதிராக செயல்பட்டவர்களை தீர்த்துகட்ட சதித்திட்டம் தீட்டியுள்ளனர். தற்பொழுது எது நடந்தாலும் ராஜபக்சேவவின் தலைக்கு ஆபத்து என்பதால் கடைசி நிமிடத்தில் இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே தனது பாதுகாப்பை அதிகப்படுத்தி தருமாறு கல்லம் மேக்ரோ இலங்கை அரசிடம் கேட்டிருந்தார் ஆனால் அவர்கள் இதை கருத்தில் கொள்ளவில்லை.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக