சுமார் 24 வருடங்களுக்குப் பின்னர் யாழ்தேவி புகையிரதத்தின் கிளிநொச்சி
வரையிலான மீள் பயணம் 15.09.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவினால் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் வெள் காலை
10 மணியளவில் கிளி நொச்சி 155ம் கட்டைப் பகுதியில் பரீட்சார்த்த பயணத்தில்
ஈடுபட்டிருந்த புகையிரத்தத்தினால் முதலாவது பொதுமகன்
பலியெடுக்கப்பட்டுள்ளார். தேர்தல் காலப் பகுதிக்குள் இப்புகையிரத நிலையம்
ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் கிளிநொச்சி
நகரிற்கிடையிலான புகையிரதப் பாதுகாப்புப் கடவைகள் பூர்த்தியாக்கப்படாத
நிலையில் பயணம் ஆரம்பிக்கப்படவுள்ளது…..ஏற்கனவே பல கால்நடைகள் இப்
பரீட்சார்த்த புகையிரதப் பயணத்தின் போது கொல்லப்பட்ட நிலையில் முதலாவது
மனிதப் பலியெடுப்பு இன்று நிகழ்ந்துள்ளது. கொல்லப்பட்டவர் கிளிநொச்சி
தொண்டைமான் நகர் பகுதியினைச் சேர்ந்த 70 வயது முதியவரான முத்தப்பா எனத்
தெரிய வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக