மனைவியுடன் கொண்ட உடலுறவுக் காட்சிகளை செல்போனில் பதிவு செய்து அதை
நண்பர்களுக்கு போட்டுக்காட்டிய கணவரை மாதவரம் போலீசார் கைது செய்து
சிறையிலடைத்துள்ளனர்.
இது பற்றி மாதவரம் காவல்நிலைய ஆய்வாளர் குமரன்
கூறியதாவது : ''டால்மியாவின் கணவர் எரல் எல்லீஸ் தனியார் கார் கம்பெனி
ஒன்றில் லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கும் பொறுப்புள்ள அதிகாரி.
போன ஜனவரி
மாதம்தான் ரெண்டு பேருக்கும் திருமணம் நடந்திருக்கு. மணமான நாளில் இருந்தே
எரல் எல்லீஸ் புளூ
ஃபிலிம் பார்க்கச் சொல்லி ஆனெல்லாவை வற்புறுத்தி
இருக்கார். இன்றைய காலகட்டத்தில் பல தம்பதிகள் இப்படிப்பட்ட காட்சிகளைப்
பார்த்து, அதன்படியே உறவு வச்சுக்க விரும்புறாங்க.
டால்மியாவிடமும் இதை
வலியுறுத்தி இருக்கார் எரல் எல்லீஸ். இதனையெல்லாம் தாண்டி உச்சகட்டமாக
மனைவியுடன் தனிமையிலிருந்த தருணத்தை அப்படியே செல்போனில் படம் பிடிக்கவும்
செய்திருக்கிறார். 'கணவர்தானே படம் எடுக்கிறார்' என்று வேறு வழியில்லாமல்
டால்மியாவும் பொறுத்துக் கொண்டார்.
ஆனால், அடுத்த சில நாட்களிலேயே எரல் -
டால்மியா உறவுக் காட்சிகள் மாதவரம் ஏரியாவில் பலருடைய செல்போன்களுக்கும்
பரவத் தொடங்கிவிட்டது. ஒருகட்டத்தில், குடும்ப நண்பர் ஒருவர் மூலம்
டால்மியாவுக்கே இது தெரியவர... நடுங்கிப் போனவராகக் கணவரிடம் அதுபற்றி
விசாரித்திருக்கிறார்.
அப்போதுதான் அந்த தாம்பத்திய காட்சிகளை நண்பர்கள்
சிலருக்கு எரல் எல்லீஸ் போட்டுக் காட்டிய உண்மை தெரிந்திருக்கிறது.
ப்ளூடூத் மூலம் அதை வாங்கிக்கொண்ட ஒரு நண்பர் மூலமாகவே அந்தக் காட்சிகள்
ஒரு செல்போன் சர்வீஸ் நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து
வியாபாரமாகிவிட்டது. டால்மியா கொடுத்த புகாரின் பேரில் இப்போது எரல்
எல்லீஸை சிறையில் அடைத்திருக்கிறோம்...'' என்று குமரன் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக