சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

15 நவம்பர், 2013

யாழ் மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்துவோம் பிரித்தானியப் பிரதமர் கமரூன் யாழில் உறுதி (படங்கள்இணைப்பு )

வடக்கில் இன்னமும் விடுவிக்கப்படாத பகுதிகளை விடுவித்து தமிழ் மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவேன் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்தார் .
இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரித்தானிய பிரதமர் வலி . வடக்கில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள சுன்னாகம் முகாமிற்குச் சென்று மக்களை ; சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
இவ்விஜத்தின் பொழுது கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் உடன் சென்றிருந்தார் . அப்பொழுது பிரதமர் மக்களிடம் நீங்கள் எவ்வாறு இடம்பெயர்ந்தீர்கள் ? உங்களுடைய காணிகளை யார் வைத்திருக்கின்றார்கள் ? இவ்வளவு காலமும் ஏன் மீள்குடியேறாமல் இருக்கின்றீர்கள் ? போன்ற பல கேள்விகளை கேட்டிறிந்துள்ளதுடன் மக்களின் தற்போதய நிலையினையும் நேரில் அவதானித்துள்ளார் அதற்கு பதிலளித்த மக்கள் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த எங்கள் காணிகளை இராணுவத்தினர் உயர்பாதுகாப்பு வலயமாக வைத்திருக்கின்றனர் . அங்கு இராணுவக் குடியேற்றங்களையும் மேற்கொள்ளவுள்ளதாக அச்சுறுத்துகின்றனர் . எனவே இதற்கு எதிராக நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர் .
அதற்குப் பதிலளித்த பிரதமர் ' இவ்விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தி உங்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பேன் ' என்றார் .




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக