சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

4 ஜூலை, 2013

இந்தியா உள்பட 38 நாடுகளின் தூதரகங்களை உளவு பார்த்தது உண்மைதான். மன்னிப்பு கேட்க முடியாது. அமெரிக்கா

இந்தியா உள்பட 38 நாடுகளின் தூதரகங்களை உளவு பார்த்தது உண்மைதான். மன்னிப்பு கேட்க முடியாது. அமெரிக்காமற்ற நாட்டு தூதரகங்களை உளவு பார்த்ததற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க தேவையில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் பாட்ரிக் வென்ட்ரல் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறுகையில்," நாங்கள் பெரும்பாலான நாடுகளுடன் மிகவும் நெருக்கமான நட்புறவுடன் உள்ளோம்.அவர்களுடனான தூதரக ரீதியிலான உறவு மேலும் தொடரும்.
எனவே அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் உள்பட 38 நாடுகளின் தூதரகங்களை உளவு பார்த்த விஷயத்தில் யாரிடம் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை. இது அனைத்து நாடுகளும் மேற்கொள்ளும் வழக்கமான ஒன்றுதான்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே  ஒரு நாடு மற்ற நாடுகளை உளவு பார்ப்பது என்பது வழக்கமான ஒன்றுதான் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபமா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக