விண்கற்கள் மோதாமல்
தடுக்க நாசா விஞ்ஞானி 402யோசனைகளை
வைத்துள்ளனர்.
விண்வெளியில் சுற்றி
திரியும் எரிகல் என்றழைக்கப்படும் விண்கற்கள் பூமிக்கு பெரும் சவாலாக
திகழ்கின்றன. சில வேளைகளில் இவை காற்று மண்டலத்துக்குள் புகுந்து பூமியை
தாக்குகின்றன.
அதை தடுக்க
அமெரிக்காவின் நாசா விண்வெளி விஞ்ஞானிகள் 402 விதமான யோசனைகள் வைத்துள்ளனர்.
அவற்றில் ரோபோக்களை
விண்வெளிக்கு அனுப்பி பூமியின் அருகே சுற்றிதிரியும் சிறிய விண்கற்களை
வேறு இடத்தில் நகர்த்தி வைக்கும் எதிர்கால திட்டமும் உள்ளது. இந்த
தகவலை நாசாவின் அசோசியேட் நிர்வாகி பில் கிரஸ்டன்மேர் தெரிவித்தார்.
பூமிக்கு அருகில்
சுற்றி ஆபத்தை விளைவிக்கும் விண்கற்களை கண்டுபிடிப்பது மற்றும் மிகப்பெரும்
ஆபத்தை உருவாக்கும் விண் கற்களை கண்டுபிடிப்பது போன்றவையும் இந்த
திட்டத்தில் அடங்கும் என்றும் அவர் கூறினார்.
இது குறித்த
கருத்தரங்கு வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக