கடந்தவாரம் இந்தியாவில் உள்ள மகாபோதி விகாரையில் அடுத்தடுத்து குண்டுகள்
வெடித்தது யாவரும் அறிந்ததே. இவ் விடத்திற்கு விரைந்த CB-CID பிரிவினர்
மற்றும் றோ அதிகாரிகள் சில தகவல்களை திரட்டிவிட்டு டெல்லியில் இருந்து
இலங்கைக்கு இரகசியத் தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
இதன் எதிரொலியை நாம் அனுராதபுரத்தில் காணலாம்! திங்கட்கிழமை மாலை முதல்,
அனுராதபுரத்தில் உள்ள ஸ்ரீமகாபோதி விகாரைக்கு கூடுதல் பாதுகாப்பு
வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சு பணித்துள்ளது. இக் கட்டளையானது மகிந்தரின்
அலரி மாளிகயூடாக பாதுகாப்பு அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என மேலும்
அறியப்படுகிறது.
டெல்லியில் இருந்து றோ அதிகாரிகள் அப்படி இரகசியத் தகவலை அனுப்பியுள்ளார்கள்?
இந்தியாவில் உள்ள, மகாபோதி விகாரையில் குண்டு வைத்தவரின் மாதிரி
உருவப்படம் ஒன்றை இந்தியா றோ அதிகாரிகள் நேற்று மாலை(திங்கட்கிழமை)
வெளியிட்டுள்ளார்கள்.
இந்தியாவில் உள்ள வணிகஸ்தலங்களை தாக்காமல், ஏன் புத்தவிகாரையை
தீவிரவாதிகள் தாக்க வேண்டும்? கடுகதியாக வேலையில் இறங்கிய றோ அதிகாரிகள்,
இதன் சூத்திரதாரி யாராக இருக்கும் என்று ஒரு அளவுக்கு ஊகித்துவிட்டார்கள்.
மியான்மார் நாட்டில், பெளத்தர்கள் என்றும் இல்லாதவாறு அதி தீவிரவாதிகளாக
மாறியுள்ளார்கள். அவர்கள் முஸ்லீம்களை கொன்று பழிதீர்த்து வருகிறார்கள்.
இதே செயல் இலங்கையில் நடைபெற ஆரம்பித்துவிட்டது.இதுவரை காலமும், அமெரிக்க
ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடி வந்த முஸ்லீம் அமைப்புகள், தற்போது
பெளத்தர்களும் தம்மை தாக்குகிறார்கள் என்பதை உணர்ந்துள்ளார்கள். ஆனால்
இதற்கு ஒரு சாம்பிள் காட்டவே, இக் குண்டுவெடிப்பை
நிகழ்த்திக்காட்டியுள்ளார்கள்.
எனவே, எங்கள் மேல் கை வைத்தால், உங்கள் புத்தபெருமான் ஞானம் பெற்ற இடம்
தரைமட்டம் ஆகும் என்பதே அச் செய்தியாகும். இலங்கையில் பொதுபலசேன அமைப்பு,
ஜாதிக கெல உரிமைய, ராவனசந்தி என்று பல சிங்கள தீவிரவாத அமைப்புகள்
இருக்கிறது. இவை கடந்த காலங்களில் இலங்கையில் உள்ள முஸ்லீம்கள் மீது பல
காட்டுமிராண்டித் தாக்குதல்கள்களை நடத்தியிருக்கிறார்கள். இந்நிலை தொடர்ந்த
வண்ணமே உள்ளது. இதனால் அடுத்த குண்டுகள் மியான்மார் நாட்டிலும் மற்றும்
இலங்கையிலும் வெடிக்கலாம். அது புத்த விகாரைகளாக இருக்கலாம் என்று றோ
பிரிவினர் இலங்கையை எச்சரித்துள்ளார்கள்.
இலங்கையில் தமிழர்களை அடித்து கொன்றதுபோல, முஸ்லீம்களையும் அடித்து தமது
கட்டுபாட்டின் கீழ் கொண்டுவர சிங்களம் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிகழ்வானது தற்போது பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே புலிகள்
மறைத்து வைத்திருக்கும் பலவெடிபொருட்கள் நாட்டில், ஆங்காங்கே இருக்கிறது.
இவற்றில் ஏதாவது ஒன்றைக் கைப்பற்றி, இலங்கையில் உள்ள புத்த விகாரையை
எவரும் தாக்கலாம். இதுவே தற்போதைய பெரும் கவலைதரும் விடையமாக மகிந்தருக்கு
உள்ளது. இதன் காரணமாகவே அனுராதபுரத்தில் உள்ள ஸ்ரீ மகாபோதி புத்த
விகாரைக்கு கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில் மேலும்
பல விகாரைகளுக்கு இவ்வாறு பாதுகாப்பு கொடுக்கவேண்டிய நிலை கூடத் தோன்றலாம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக