சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

4 ஜூலை, 2013

மாகாணங்களுக்கு காவற்றுறை அதிகாரம் வழங்கினால் நாட்டில் பிரிவினை வாதம் ஏற்படும்; பாதுகாப்பு செயலர்

news
மாகாணங்களுக்கு காவற்றுறை அதிகாரம் வழங்கப்பட்டால் நாட்டில்
பிரிவினை வாதத்தை தோற்றிவிப்பதுடன் ஆபத்தான நிலைக்கும்
இட்டுச் செல்லும் என பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
13வது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு அமைய மாகாணங்களுக்கு காவற்துறை
அதிகாரங்கள் வழங்கப்பட்டால் பல விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,
13வது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு அமைய மாகாணங்களுக்கு காவற்துறை 
அதிகாரங்கள் வழங்கப்பட்டால் முதலமைச்சர்களினால் நிர்வகிக்கப்படும் மாகாணங்களிலும் 
9 காவற்துறைகள் உருவாகும்.
இந்த காவற்துறை நிலையங்களின் நேரடியான நிர்வாகம் காவற்துறை மா அதிபரிடம் 
இருந்து மாகாண முதலமைச்சரின் கைகளுக்குள் செல்லும். முதலமைச்சரின்
கீழ், பிரதிக்காவற்துறை மா அதிபர் ஒருவர் மாகாண காவற்துறையை நிர்வகிப்பார்.
அத்துடன் நாட்டில் காவற்துறைக்கு ஆட்சேர்ப்பு மாகாணத்திற்குள்ளேயே மேற்கொள்ளலாம்
என்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் இனரீதியான காவற்துறை 
நிலையங்கள் உருவாக வழியமைக்கும்.
எனினும் இந்த மேற்கூறப்பட்ட நிலைமைகள் நாட்டில் பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும்
அதேவேளை மாகாண சபையின் காவற்துறைக்கு பொறுப்பாக இருக்கும் பிரதிக்காவற்துறை
மா அதிபர் ஒருவர், கொலை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டால்,
அவரிடம் விசாரணை நடத்துவதற்கு கூட மாகாண முதலமைச்சரிடம் அனுமதிபெற
வேண்டும்.
அத்துடன் அவருடைய குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதா இல்லையா என்பது
குறித்தும் முதலமைச்சரின் விருப்பத்துடனேயே இடம்பெறும்.  
இதன் மூலம் காவற்துறையினரின் ஒழுக்கம், சட்டத்தை பாதுகாக்கும் காவற்துறை 
மாஅதிபரின் அதிகாரம் இல்லாமல் போய்விடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
மாகாணங்களுக்கு காவற்றுறை அதிகாரம் வழங்கினால் நாட்டில் பிரிவினை வாதம் ஏற்படும்; பாதுகாப்பு செயலர்
news
மாகாணங்களுக்கு காவற்றுறை அதிகாரம் வழங்கப்பட்டால் நாட்டில் பிரிவினை வாதத்தை தோற்றிவிப்பதுடன் ஆபத்தான நிலைக்கும் இட்டுச் செல்லும் என பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

13வது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு அமைய மாகாணங்களுக்கு காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால் பல விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

13வது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு அமைய மாகாணங்களுக்கு காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால் முதலமைச்சர்களினால் நிர்வகிக்கப்படும் மாகாணங்களிலும் 9 காவற்துறைகள் உருவாகும்.

இந்த காவற்துறை நிலையங்களின் நேரடியான நிர்வாகம் காவற்துறை மா அதிபரிடம் இருந்து மாகாண முதலமைச்சரின் கைகளுக்குள் செல்லும். முதலமைச்சரின் கீழ், பிரதிக்காவற்துறை மா அதிபர் ஒருவர் மாகாண காவற்துறையை நிர்வகிப்பார்.

அத்துடன் நாட்டில் காவற்துறைக்கு ஆட்சேர்ப்பு மாகாணத்திற்குள்ளேயே மேற்கொள்ளலாம் என்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் இனரீதியான காவற்துறை நிலையங்கள் உருவாக வழியமைக்கும்.

எனினும் இந்த மேற்கூறப்பட்ட நிலைமைகள் நாட்டில் பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் அதேவேளை மாகாண சபையின் காவற்துறைக்கு பொறுப்பாக இருக்கும் பிரதிக்காவற்துறை மா அதிபர் ஒருவர், கொலை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அவரிடம் விசாரணை நடத்துவதற்கு கூட மாகாண முதலமைச்சரிடம் அனுமதிபெற வேண்டும்.

அத்துடன் அவருடைய குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதா இல்லையா என்பது குறித்தும்  முதலமைச்சரின் விருப்பத்துடனேயே இடம்பெறும்.

இதன் மூலம் காவற்துறையினரின் ஒழுக்கம், சட்டத்தை பாதுகாக்கும் காவற்துறை மா அதிபரின் அதிகாரம் இல்லாமல் போய்விடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=234892146204471613#sthash.rdoA9UD9.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக