பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட இலங்கை
பாதுகாப்பு பிரிவினமுக்கியஸ்தர்களின் தொலைபேசிகள்
ஒட்டுக்கேட்டமை தொடர்பிலான சம்பவம்
குறித்து புலனாய்வுப்பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சரவைப்
பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இலங்கை பாதுகாப்பு பிரிவின் முக்கியஸ்தர்களின் தொலைபேசிகள் குறிப்பிட்ட
ஒரு தரப்பினரால் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் இலங்கை
புலனாய்வுப்பிரிவுக்கு கிடைத்ததையடுத்து அவ்விடயம் தொடர்பில் தீவிர அவதானம்
செலுத்தப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கெஹெலிய
ரம்புவெல நேற்று வியாழக்கிழமை ஊடக அமைச்சில் நடைபெற்ற விசேட
ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக