சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

30 ஜூலை, 2013

ஈழவிடுதலைப் போராட்டத்தின் மென்வலுவில் விளையாட்டுத்துறையும் ஓர் கருவியாக உள்ளது! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்



2009ம் ஆண்டுக்கு பின்னரான ஈழத் தமிழினத்தின் அக-புறச் சூழலில் ஈழவிடுதலைப் போராட்டத்தின் மென்வலுவில் விளையாட்டுத்துறையும் ஓர் கருவியாக உள்ள நிலையில்
வலுவானதொரு மென்வலுத்தளத்தில் நின்றவாறு எதிர்காலத்தில் இதனைச் சாத்தியப்படுத்தலாம் என்ற மூலோபாய அடிப்படையில்
புலம்பெயர் ஈழத்தமிழர்களிடையே விளையாட்டுத்துறையினை வளர்த்தெடுக்கும் முன்முயற்சியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபடத் தொடங்கியுள்ளது.
இதனொரு அங்கமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சு பிரான்சுக்கான செயல்மையம் ஒன்றினை கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்குராப்பணம் செய்து வைத்துள்ளது.
இந்நிகழ்வில் இணையவழி பரிவர்தனையூடாக கருத்துரை வழங்கிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன்
புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் சமூகத்திடையே விளையாட்டு துறையினை முறைசார்வழியில் வளர்த்தெடுத்துக் கொள்வதன் ஊடாக அனைத்துலக விளையாட்டுப் போட்டிக்களங்களில் ஈழத்தமிழினமும் தனது தேசிய அடையாளங்களுடன் தனித்துவமாக பங்கெடுத்து கொள்வதற்கு ஏதுவான நிலையினை எதிர்காலத்தில் எட்டுவோம்.
அனைத்துலக சமூகங்களிடம் இருந்து ஈழவிடுதலைப் போராட்டத்திற்கான தோழமையினை திரட்டுவதற்கும் போராட்டத்தினை அனைத்துலக மயப்படுத்துவதற்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்தினை அம்பலப்படுத்துவதற்கும் அனைத்துலக விளையாட்டுப் போட்டிக்களங்களும் அமைகின்றது என  தெரிவித்துள்ளார்.
பிரான்சுக்கான செயல்மையத்தின் பொறுப்பாளராக இலங்கையின் தேசிய அளிவிலான விளையாட்டுத்துறையில் பங்கெடுத்தவரும் பிரான்சு வாழ் தமிழ்சமூகத்தின் உதைபந்தாட்ட துறையில் மூத்த வழிகாட்டியுமாக விளங்கும் மதிப்புக்குரிய திரு.எஸ்.என்.ஜே அந்தோனிப்பிள்ளை அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைப்பாளராக பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறையின் மூத்த அனுபவசாலியான  திரு.சுரேன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ற் 18ம் நாள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சின் பிரான்சுக்கான செயல்மையம் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிமுக நிகழ்வொன்று இடம்பெற இருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக