அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டைக் கோபுரத்தை அல்கய்தா தீவிரவாதிகள் கடந்த 2001 செப்டம்பர் 11ம் தேதி தகர்த்தனர்.
இதையடுத்து, அல்கய்தா இயக்கத்தின் தலைவரான
ஒசாமா பின்லேடனை அமெரிக்கா தேடி வந்தது. பாகிஸ்தா னில் பதுங்கியிருந்த
ஒசாமாவை, 2011ம் ஆண்டு மே 2ம் தேதி அமெரிக்க படையினர் கொன்றனர். இது
தொடர்பாக, அப்போதாபாத் விசாரணை கமிஷன் ஒரு அறிக்கை தயாரித்துள்ளது. அது
இன்னும் வெளியிடப்படவில்லை.
எனினும், அதிலிருந்த தகவல்களை அல்ஜசீரா
நிறுவனம் வெளியிட்டது. ஒசாமா, 9 ஆண்டுகளாக பாகிஸ்தானில் பதுங்கியிருந்தது,
கவ்பாய் தொப்பி அணிந்து ஒசாமா சுதந்திரமாக சுற்றி யது, பாகிஸ்தான் உளவு படை
கவனக்குறைவு ஆகிய தகவல்கள் வெளியாயின. இதையடுத்து, அந்த வெப்சைட்டை
பாகிஸ்தான் அரசு நேற்று முடக்கியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக