யாழ்.நகரப் பகுதியை அண்டியுள்ள மணியந்தோட்டம் கிராமத்தில் ஜேசுவின்
சொரூபம் விஷமிகளால் நேற்று முன்தினம் இரவு உடைத்து
நெருக்கப்பட்டிருக்கின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
கிராமத்தில் 5ம் ஒழுங்கையின் ஆரம்பத்தில் அமைக்கப்பட்டிருந்த குறித்த சொரூபம் கிராம மக்களால் வழிபடப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் நடமாடிய சில விஷமிகள்
கற்களைக் கொண்டு எறிந்து சொரூபத்தை பல பகுதிகளாக உடைத்து கீழே
வீழ்த்தியுள்ளனர்.
இதனையடுத்து மக்கள் குறித்த விஷமிகளை அவதானித்து அவர்களை துரத்தியபோது அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் கிராமசேவகருக்கு தெரியப்படுத்தியதுடன், பொலிஸிலும் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை மணியந்தோட்டம் சந்தியிலிருந்த மாதா சொரூபமும் கடந்த
2மாதங்களுக்கு முன்னர் இதேபோன்று வி~மிகளால் உடைத்து
நொருக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த இரு சம்பவங்களும் நன்கு திட்டமிட்ட வகையில்
கிறிஸ்தவ மதத்தின் நம்பிக்கைகளையும், அவர்தம் வழிபாட்டையும் இழிவுபடுத்தும்
வகையில் மேற்கொள்ளும் நடவடிக்கையாக மக்கள் பார்க்கின்றனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக