எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து மிகக் கடுமையான வெப்பத்தைப்
பிரான்ஸ் சந்திக்க உள்ளது. பிரான்சின் தென் கிழக்கு மற்றும் மத்திய
கிழக்குப் பகுதிகளில் கடுமையான வெப்ப அலைகள் (caniculaire) தாக்க உள்ளன.
நிழலிலேயே 30° வெப்பமும் தென்பகுதியில் 35° யைத் தாண்டியும்
வெப்பம் அமைய உள்ளது. இவ் வெப்பமானது எதிர்வரும் வாரம் முழுவதும்
நீடிக்க உள்ளது என வானிலை மையங்கள் எச்சரித்துள்ளன. இந்த வெப்பத்தின்
முடிவில் கடுமையான புயல் மழை ஏற்படும் என்றும் கூறப்படுகின்றது.
தென்கிழக்குப் பகுதியில் இருந்து வரும் வெப்பக்காற்று பிரான்ஸைக்
கடப்பதாலேயேயும் பிரித்தானியாவின் தீவுகளில் இருந்து வரும்
எதிர்ச்சூறாவளியினாலும் (anticyclone) இந்த வெப்நிலை உயர்வு ஏற்பட உள்ளது.
குறைவான வெப்பநிலையாக 20° க்கு மேலேயும் அதிகூடிய வெப்பநிலையாக 33°
வெப்பமும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெப்ப அலையைச் சமாளிக்க சில ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன.
தாகத்திற்காகக் காத்திராமல் அடிக்கடி நீர் அருந்த வேண்டும்.
நாளின் நண்பகல் வேளைகளில் அதி கூடிய வெப்பம் இருக்குமாகையால் கூடிய அளவு வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்
வெளிர்மையான நிறங்கள் உள்ள மெல்லிய துணிகளினால் ஆன பருத்தி
உடைகளை அணியவும். கறுப்பு நிறத்தைத் தவிர்க்கவும். கறுப்பு நிறம் வெப்பத்தை
உள்வாங்கும் தன்மை கொண்டது.
வீடுகளின் யன்னல்களின் வெளிப்புற அடைப்புகளைச் (Volets -
Shutters) சாத்திவிட்டு யன்னல்களைத் திறந்து விட்டுக் காற்றோட்டம் உள்ளவாறு
பார்த்துக் கொள்ளவும். மின்விசிறிகளையும் பயன்படுத்தவும்.
அடிக்கடி குளிக்கவும். உடலைத் துவட்டாது விடவும்.
வயதானவர்களையும் குழந்தைகளையும் வெப்பத்திலிருந்து பாதுகாக்கவும்.
| Forecast next 48 hours | Location for forecasts: Paris Sunday, 21 July 2013,
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| Forecast next 14 days |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக