சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

2 ஆகஸ்ட், 2013

யாழிற்கு செல்ல கோத்தபாயவுக்கு தடை: மஹிந்த அரசு அதிரடி

 


 வட மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் சிறிலங்கா அரசு தடுமாறி வருகின்றது  சில நாட்களுக்கு முன்னர் ஆளும்தரப்பு அமைச்சர்களை அங்கு செல்லக் கூடாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்திருந்தார். 


அமைச்சர்களின் பிரசன்னம் மக்களை வெறுப்பூட்டச் செய்யும் என இராணுவ புலனாய்வினரின் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்ததன் பின்னர் மஹிந்த இந்த முடிவினை எடுத்திருந்தார்.
அதன் பின்னர் சிங்கள வேட்பாளர்களை ஆளுங்கட்சிக்குள் நுழைக்க கட்சியின் மூத்த உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கூடவே முன்னாள் போராளிகளையும் வேட்பாளர்களாக இணைக்கப்படவில்லை. இந்த முடிவும் ராணுவ புலனாய்வு அறிக்கையின் படியே மேற்கொள்ளப்பட்டிருந்தது.
தற்போது கோத்தாவின் உருவப்படத்தைப் பயன்படுத்த, சிறிலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.    
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, முஸ்லிம் வர்த்தகரான சிராஸ் யாழ்ப்பாணத்தில் கோத்தாபய ராஜபக்சவின் படத்துடன் பெருமளவு சுவரொட்டிகளை ஒட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
 இந்த நிலையில், சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதையடுத்து, அவருக்கு ஆதரவானவர்கள் யாழ்.செயலகத்துக்கு முன்பாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.    
இதன்பின்னர், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்கு வேட்பாளர் பட்டியலில் ஒதுக்கப்பட்ட இடம், சிராசுக்கு வழங்கப்பட்டது. 
இந்தநிலையிலேயே, கோத்தபாய ராஜபக்சவின் ஒளிப்படத்தைப் பயன்படுத்தியதால்தான், வேட்பாளர் பட்டியலில அவரைச் சேர்த்துக் கொள்வதில் இழுபறி ஏற்பட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிறேமஜயந்த  தெரிவித்துள்ளார்.
மேலும், கோத்தபாய ராஜபக்சவின் படத்தையோ, யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவின் படத்தையோ தேர்தல் சுவரொட்டிகளில் பயன்படுத்தக் கூடாது என்றும் சிராசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், கோத்தபாய ராஜபக்சவின் படத்துடன் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை உடனடியாக அகற்றுமாறும் வேட்பாளர் சிராசுக்கு, அமைச்சர் சுசில் பிறேமஜயந்த உத்தரவிட்டுள்ளார்.   
இவை அனைத்தும் ஆளுங்கட்சிக்குள் வடக்கு தேர்தல் தொடர்பில்  நம்பிக்கை இழந்து போவதனையே காட்டுவதாக கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக