வடக்கில் நடைபெறவுள்ள தேர்தலை பொதுநலவாய நாடுகள் கண்காணிக்கவுள்ளது என செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா அறிவித்துள்ளார்.
கென்ய முன்னாள் பிரதி ஜனாதிபதி
ஸ்டீபன் கலொன்சோ தலைமையிலான நான்கு பேரைக் கொண்ட குழு 21ஆம் திகதி
நடைபெறவுள்ள தேர்லை கண்காணிக்கவுள்ளது. இக்கண்காணிப்புக்குழு எதிர்வரும்
14ம் திகதி முதல் 28ம் திகதி வரை இலங்கையில் பிரதானமாக யாழ்ப்பாணத்தில்
தங்கியிருப்பர்.
இக்கண்காணிப்புக் குழுவிற்கு
பொதுநலவாயச் சபையின் ஜனநாயகச் செயலகத்தின்- அரசியல் விவகாரப் பிரிவின்
தலைவர் மார்டின் காசியே லமையிலான மூன்று பேரைக் கொண்ட குழு உதவியாக
செயற்படவுள்ளது. இலங்கை தேர்தல் செயலகத்தின் அழைப்பின் பேரலேயே இக்குழு
இலஙகை வரவுள்ளதாக செயலாளர் நாயகம் கலேஷ் சர்மா தெரிவித்தார்.
வடக்கில் நடக்கவுள்ள இத்தேர்தல்
வரலாற்று புகழ் மிக்கது. இத்தேர்தல் அமைதியானதாகவும் நீதியானதாகவும்
நேர்மையானதாகவும் இருக்கும் என தான் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சுதந்திரமாக இயங்கவுள்ள இந்தக்
கண்காணிப்புக்குழு சர்வதேச தேர்தல் கொள்கை பிரகடனங்களுக்கமைவாக வடக்கு
தேர்தல் கண்காணித்து அறிக்கை தயாரித்து செயலாளர் நாயகம் க்லேஷ் சர்மாவிடம்
கையளிக்கவுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக