சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

25 செப்டம்பர், 2013

கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கியவர்களை இலக்கு வைத்து மல்லாகத்தில் கைக்குண்டு தாக்குதல்


நேற்று இரவு 10,10 மணியளவில் இனம் தெரியாதவர்களினால் மேற்க் கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் பாரிய சத்தத்துடன் குண்டு வெடித்த போதிலும் பாரிய இழப்புக்கள் எவையும் ஏற்படவில்லை . சன்சமூக நிலையம் பாதிக்கப்பட்டுள்ளது .
மல்லாகம் மத்தியில் உள்ள அம்பனாக்கடவை வீதியென அழைக்கப்படும் சேச் வீதியில் உள்ள சுவாமி ஞானப்பிரகாசர் சனசமூக நிலையம் மற்றும் நூலகக் கட்டிடத்தின் அருகாமையில் கைக்குண்டு வீழ்ந்து வெடித்துள்ள போதிலும் சனசமூக நிலையத்தின் கட்டிடச்சுவர் மற்றும் அருகில் உள்ள வீட்டின் கதவு சுவர் என்பவற்றில் குண்டுச் சிதறல்கள் பறந்துள்ளதுடன் சேதமும் ஏற்பட்டுள்ளது .
மோட்டார் சையிக்கிளில் வந்தவர்கள் இந்த கைக்குண்டுத் தாக்குதலை மேற்க்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளார்கள் . குறிப்பிட்ட சனசமூக நிலைய முன்றலில் இருந்து இரவு வேளையில் இளைஞர்கள் இருந்து கதைப்பதாகவும் அவர்களை இலக்கு வைத்து இந்த குண்டுத் தாக்குதல் இடம் பெற்று இருக்கலாம் எனவும் அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றார்கள் .
இந்தப் பகுதியில் உள்ள இளைஞாகள் நடந்து முடிந்த வட மாகாண சபைத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வேலை செய்தமையால் இத்தகைய நிலமை ஏற்பட்டுள்ளதாகவும் அந்தப் பகுதியில் உள்ள இளைஞாகள் தெரிவித்துள்ளார்கள் .
தெல்லிப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராய்சி தலைமையிலான் பொலிஸ் குழுவினர் உடனடியாக சம்பவம் இடம் பெற்ற இடத்திற்கு விரைந்து வந்ததுடன் விசாரனைகளையும் மேற்க் கொண்டுள்ளார்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக