சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

14 செப்டம்பர், 2013

இலங்கையில் ஈ.பி.டி.பி என்ற இராணுவத் துணைக்குழுவினால் தமிழ்ச் சிறுவர்கள் சிறுமிகளை அடிமைகளாக விற்கப்படுவதாக விக்கிலீக்ஸ் இரகசியத் தகவல்

தமிழ்ச் சிறுமிகளை பாலியல் அடிமைகளாக்கிய சிங்களவனின் காலை நக்கி பிழைப்பு நடத்தும் ஈ.பி.டி.பி டக்ளஸ் - அம்பலப்படுத்தியது அமெரிக்கா  என்ற செய்தி இணையத்தளங்களில்

14 09 2013
இலங்கையில் ஈ.பி.டி.பி என்ற இராணுவத் துணைக்குழுவினால் தமிழ்ச் சிறுவர்கள் அடிமைகளாக விற்கப்படுவதாக விக்கிலீக்ஸ் இரகசியத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் முன்னாள் சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ரோபேட் ஓ பிளாக்கினால் எழுதப்பட்ட கேபிளில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் அறிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கையில்:

ஈ.பி.டி.பி என்கிற இராணுவ துணைக்குழுவினால் குறிப்பாக ஆண் சிறுவர்கள் அடிமை வேலைகளை மேற்கொள்ளவும், பெண் சிறுமிகள் விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்தவும் இந்தியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்குக் கடத்தப்படுகிறார்கள். இக்கடத்தல் நடவடிக்கைகளுக்கு பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள விமானநிலைய சுங்க அதிகாரிகள், குடிவரவு,குடியகழ்வு அதிகாரிகள் உதவிகளை வழங்குகிறார்கள்.

தமிழ்ச் சிறுமிகள் வலுகட்டாயத்தின் பெயரில் பாலியல் அடிமைகளாக இராணுவத்தினரின் பாலியல் தேவைகளுக்கு விற்கப்படுகின்றனர். ஒரு இரவில் மட்டும் ஐந்து தொடக்கம் பத்து வரையிலான இராணுவத்தினர் ஒரு தமிழ்ச் சிறுமி மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுகின்றனர். சில சமையங்களில் இத்தகைய பாலியல் அடிமைகளுக்கு கிட்டத்தட்ட ஒரு அமெரிக்க டொலர்களை வழங்குகின்றனர் எனவும் அதேநேரம் இச்சிறுவர்களின் பெற்றோர்கள் முறைப்பாடுகளைச் செய்யமுடியாத மிகத் துர்ப்பாக்கிய நிலையில் வாழ்ந்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி தமிழ் ஊடகங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக