நீதியும் நியாயமுமான ஜனநாயக ரீதியான தேர்தல் ஒன்றை உறுதிப்படுத்துவதற்காகவும் முறைப்பாடுகளைப்
பெற்று அவற்றை எமது தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி அது தொடர்பான
அழுத்தங்களை பிரயோகிப்பதற்காகவுமே யாழ் . மாவட்ட அலுவலகம் திறந்து
வைக்கப்பட்டுள்ளது என பவ்ரல் அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்தனர் .
பவ்ரல் அமைப்பின் அலுவலகத்தை யாழில் திறந்து வைத்தபின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
இவ்விடயம் தொடர்பாக அதிகாரிகள் மேலும் தெரிவிக்கையில் ,
எமது பவ்ரல் அமைப்பின் பிராந்திய அலுவலகம் ஒன்றினை யாழ்ப்பாணம்
இலக்கம் 31 , குருசோ வீதியில் திறந்து வைத்துள்ளோம் . இவ் அலுவலகம் தேர்தல்
முடியும் வரை காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரைக்கும் இயங்கும் .
தேர்தல் முறைப்பாடுகளை நேரிலோ அல்லது எமது 072 4965396 என்ற தொலைபேசி
இலக்கத்துடனோ அல்லது மாவட்ட ஒருங்கிணைப்பாளரிடம் 0789141869 என்ற
இலக்கத்திலோ தகவல்களை வழங்க முடியும் .
எங்களுடைய அலுவலகம் ஒவ்வொரு தேர்தல் பிரிவுகளிலும் இயங்கும் . வடக்கு
மாகாணம் அனைத்து மாவட்டங்களிலும் எமது அலுவலகம் இயங்குகின்றது என்றனர் .
இந்நிகழ்வில் பவ்ரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவீந்திர சில்வா ,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சசிஸ்கார் , கியூடெக் கரித்தாஸ் இயக்குநர்
அருட்பணி பேனாட் றெக்னோ , கியூடெக் நிறுவனத்தின் நிர்வாக உத்தியோகத்தர்
திலகரட்ணசிங்கம் , சட்டத்தரணி சுகாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக