சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

20 செப்டம்பர், 2013

கீதாஞ்சலிக்காக கிளிநொச்சியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் - கபே அமைப்பு

                     நக்கிணான் நாவிளந்தான்

கிளிநொச்சி மாவட்டத்தில் அரச கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் போட்டியிடும் கீதாஞ்சலிக்காக கபே அமைப்பு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

தேர்தல் கண்காணிப்புக்கென இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட அரசின் புலனாய்வுப் பிரிவான கபே அமைப்பு சர்வதேசத்திற்கு தன்னையொரு நேர்மையானதும், சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) எனக் குறிப்பிட்டுக் கொண்டு வெளிநாடுகளின் நிதிகளை வாரியெடுத்து தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது.



இலங்கை அரசின் தேர்தல் மோசடிகளுக்கு உடந்தையாகும் கபே அமைப்பை புரிந்து கொள்வதற்கு இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மிகப் பெரும் உதாரணங்களாகும். 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக