யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுமக்கள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டு வன்முறைகளைத் தூண்டிவிட்டு வடக்கு இளைஞர்களை மற்றுமொரு போருக்குள் இழுக்க இராணுவ முயற்சித்து வருகிறது.
தேர்தலுக்கு பின்னர் அராலி, கோட்டைக்காடு, மல்லாகம், சுன்னாகம் உள்ளிட்ட இடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மீது இராணுவம் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.
கச்சாயில் மோட்டார் சைக்கிள் ஒன்றை எரித்தமை, யுத்தம் முடிவடைந்த பின்னர் முதன்முதலாக மல்லாகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதரவாளர்கள் மீது கைக்குண்டு வீசப்பட்டுள்ளது.
அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக கூறிவரும் ஜனாதிபதி, இவ்வாறான சம்பவங்களை கவனத்தில் எடுத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதேவேளை, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரும், இவ்விடயத்தில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதேவேளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் 88 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையினை முடக்கும் ஒரு முயற்சியாகும்.
ஏற்கனவே அங்கு 412 வைத்தியர்கள் தேவைப்படும் நிலையில் 322 வைத்தியர்களே அங்கு கடமையாற்றுக்கின்றனர்.
வடமாகாண ஆளுநர் வடமாகாண சபைக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
வடமாகாண சபையின் வாகனங்களை கொழும்பில் ஆளுநரின் மனைவி, பிள்ளைகள் பயன்படுத்துகின்றனர்.
இராணுவத்தினரும் வடமாகாண சபையின் வாகனங்களை கையாண்டு வருகின்றனர். அத்துடன், வடமாகாண சபையின் நிதி நிலைமையும் மோசமான ஒரு நிலையிலுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக