பாடசாலை மாணவி ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் கூறப்படும் இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிலாபம் மெரவல குடியேற்றத்திட்டத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் 8ஆம் வகுப்பில்
கல்வி பயிலும் 13 வயதுடைய மாணவியே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டவராவார். இச்சிறுமி கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருடன் காதல் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டிருந்துள்ளார். இதன் காரணமாக கடந்த 28ஆம் திகதி பிரத்தியேக வகுப்பிற்குச் செல்வதாக வீட்டை விட்டு வெளியேறியுள்ள சிறுமி சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து இருவரும் சிலாபம் சிங்கபுர எனும் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் புதிய வீடொன்றிற்குள் சென்றுள்ளனர்.

அங்கு வைத்தே சிறுமி மீது இக்குற்றம் புரியப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது விருப்பத்துடனேயே தனது காதலனான சந்தேக நபர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமி வைத்திய பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக