சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

16 செப்டம்பர், 2013

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா மீது விஷ வாயு தாக்குதல் நடத்த அல் கய்தா சதி!!


அமெரிக்கா மீது விஷவாயு தாக்குதல் நடத்த அல் கய்தா தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி உள்ளது  அம்பலமாகி உள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அல் கய்தா தீவிரவாதிகளின் 2 விஷ வாயு தொழிற்சாலைகளை ராணுவ வீரர்கள் கண்டுபிடித்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈராக்கில் கடந்த சில மாதங்களாக அரசுக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. ஈராக் அதிபர் நூர் அல் மாலிக் பதவி விலக கோரி அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடக்கிறது. இந்த நிலையில் அல் கய்தா தீவிரவாதிகள் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூடு, ராணுவ வீரர்களை கடத்தி கொலை செய்வது உள்ளிட்ட வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாக்தாத்தில் நேற்று பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, 2 கட்டிடங்களில் விஷ வாயு தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. விஷ வாயு தயாரிக்கும் உபகரணங்களை ராணுவத்தினர் பறிமுதல் செய்து கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர். அங்கிருந்த தீவிரவாதிகள் 5 பேரை கைது செய்தனர். ஈராக் பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் முகமது அல் அஸ்கரி இதை உறுதி செய்துள்ளார்.

ஈராக்கில் சதாம் உசேன் சர்வாதிகார ஆட்சியின் போது வடக்கு பகுதியான குர்ஷித்தில் நடந்த சண்டையில் தீவிரவாதிகள் விஷவாயு தாக்குதல் நடத்தினர். சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ரசாயன ஆயுதம் பயன்படுத்தி வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் பாக்தாத்தில் அல் கய்தா தீவிரவாதிகளின் 2 விஷவாயு தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இங்கு விஷவாயு தயாரித்து ஈராக், ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மீது மிக பெரிய தாக்குதல் நடத்தவும், பொம்மை ஹெலிகாப்டரில் விஷ வாயுவை நிரம்பி ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கி மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் விஷ வாயுவை கசிய விட்டு மக்களை கொல்லவும் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக