தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றி பிரிவினைக்கு வழிவகுக்கும் என எவரும்
அஞ்சத் தேவையில்லையென ஜனநாயக கட்சித் தலைவர் சரத் பொன்சேகா இன்று கூறினார்.
இந்த நாட்டில் பிரிவினைக்கு இடமில்லை தமது இருப்புக்காக இனவாதத்தை
தழுவியுள்ள தென்பகுதி அரசியல் கட்சிகள் மக்கள் மனதில் பிரிவினைப்
பூச்சாண்டியை ஊட்டி வளர்ப்பதாக அவர் கூறினார். சகல இனக் குழுக்களும்
அரசியல் கட்சிகளும் இனைந்து வேலை செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது எனவே
மக்கள் தமது மனதில் தேவையில்லாத பயத்தை கொண்டிருக்க தேவையில்லையென அவர்
கூறினார்.
ஐ.ம.சு.கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தயாசிறி ஜயசேகர ஐ.தே.க
விலிருந்து விலகி சென்றதனால் தனது ஜனனாயக கட்சி பின்னடைவை கண்டதாக அவர்
கூறினார். ஜனநாயக கட்சியில் இணையவிருந்த ஐ.தே.க உறுப்பினர்கள் 20,000 பேர்
ஜயசேகரவுடன் அரசாங்க பக்கம் சென்றுவிட்டதாக அவர் கூறினார். ஜனநாயக கட்சியை
பிரதான அரசியல் கட்சியாக மாற்றுவதற்கு காலமெடுக்கும். ஆனால் சிறிய மரமொன்று
பெரிய மரமாய் வளர்வது போன்று இது வளருமென்று அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக