சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

5 அக்டோபர், 2013

இலங்கையில் நடத்தப்படும் மாநாடு குறித்து மகாராணிக்கு உலக தமிழர் பேரவை கடிதம்.

இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்துவதில் உள்ள அவதானம் குறித்து
பிரித்தானியாவின் உலக தமிழர் பேரவை பிரித்தானிய மகாராணியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது .
உலக தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்துக்குரிய இமானுவேல் , மகாராணிக்கு கடிதம் மூலம் இந்த அவதானத்தை சுட்டிக்காட்டியுள்ளார் .

இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்துவதன் காரணமாக அந்த அமைப்பின் கொள்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் .
2013 ஆம் ஆண்டின் பொதுநலவாய நாடுகளின் அமர்வை கொழும்பில் நடத்துவதன் மூலம் புதிதாக அந்த அமைப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பிரகடனம் கேள்விக்குரியதாக்கியுள்ளது .
அத்துடன் இலங்கைக்கு பொதுநலவாய தலைமைத்துவம் அடுத்த இரண்டு வருடங்களுக்கு செல்லுமானால் அது பொதுநலவாயத்தின் பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் .
1948 ஆம் ஆண்டு பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் , தமிழர்களுக்கு நியாயங்கள் மறுக்கப்பட்டுள்ளன. புறக்கணிப்புக்களும் குடியேற்றங்களும் தொடர்கின்றன .
அத்துடன் படையினரும் விடுதலைப் புலிகளும் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படவில்லை . என்று  அந்த அமைப்பு  தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக