சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

3 அக்டோபர், 2013

பரிஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்த அதிவேகத் தொடருந்தில் பயணிகளிடையே தகராறு

நேற்று மாலை Creusot (Saône-et-Loire) தொடருந்து நிலையத்தில் பயணிகளிடையே நடந்த தகராற்றில் ஒருவர் கத்தியால் கழுத்தில் குத்தப்பட்டுள்ளார். ஆபத்தான நிலையில் இவர் உடனடியாக அருகிலிருந்து வைத்தியசாலைக்ககுக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்தக் கொலை முயற்சியைச் செய்தவர் இத்தாலியில் வசிக்கும் லிபியாவைச் சேர்ந்தவர். இவர் குரூசோ தொடருந்து நிலையத்திலேயே வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விசாரணையில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக   மேலும் தெரியவருவதாவது.
 
நேற்று இரவு 21 மணிக்கும் 21:30 மணிக்கும் இடையில் மார்செய் இலிருந்து பரிஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்த அதிவேகத் தொடருந்தில் (TGV) உள்ள தேநீர் விடுதியில் நான்கு வெளிநாட்டவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவர் பெண்கள். இதிலேயே கோபடமடைந்த ஒருவர் எதிரில் நின்றவரைக் கத்தியாலேயோ அல்லது உடைந்த போத்தல் ஒன்றாலோ கழுத்தில் குத்தி உள்ளார். 
அதி வேகமெடுத்துச் சென்று கொண்டிருந்த தொடருந்தின்  பொறுப்பாளர் அறிவித்ததை அடுத்துத் தொடருந்து குரூசோ தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டு அவசர முதலுதவிப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.

வீடியோ இந்த  இணைப்பில் பார்க்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக