சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

7 அக்டோபர், 2013

சிங்கத்தின் குகைக்குள் சிக்கிய தமிழர்கள் சிறுத்தை போல் சீறலாமா?


அன்புக்குரிய உறவுகளே பல முரணான செய்திகள் கருத்துக்கள் விமர்சனங்கள் வ‌ெளிவந்த வண்ணம் உள்ளன.
எமது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் ஆகியவற்றில் மதிப்பும் மரியாதையும் உள்ளவர்கள் எது எப்படி இருந்தாலும் தமிழர்களுக்க கிடைக்கக்கூடிய உரிமை கிடைக்கட்டும்  என்று யார் நினைப்பார்கள்?

  1.  மகிந்தரின் காலில் அரசியல் செய்பவர்கள் என்று ஒரு கருத்தும்.
  2. அரசியல் என்றால் சில விதிமுறைகளை கடைப்பிடிகத்தான் வேண்டும் என்றும் சில கருத்தும்.
  3. பற்றவைப்பான் பரதேசி என்ற புகைப்படமும் (தமிழ்குரலோன். facebook.com ) 
என்று செய்திகள் நல்லவையாகவும் தீயவையாகவும் வ‌ெளியிடப்படுகின்றன.
நாங்கள் ஆதங்கத்தில் வ‌ெளியிடுகின்ற விமர்சனங்கள் எதிரிக்கு வலு ஊட்டுபவையாகவே அமைந்துவிடும்.
‌இப்படிப்பட்ட விடயங்கள் நாம் சற்று பொறுத்திருந்து பார்க்கவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளோம்.
ஏன் என்றால் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதரீதியாக முடக்கப்பட்டபின்னர் தமிழர்களுக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் யார் பாதுகாப்பு கொடுப்பது? ஆனந்தி சசிதரன் கூட தமக்கு பாதுகாப்பு தரவில்லை என்று செய்தி வ‌ெளியிட்டுள்ளார்.
ஈழநாதம் இணையத்தில் வ‌ெளியிடப்பட்டுள்ள செய்தியில் சம்பந்தனை மகிந்த விரட்‌டினாரா அல்லது  ஒத்துபோகின்றாரா? என்று செய்தி வ‌ெளியிடப்பட்டுள்ளது!!
சிங்கத்தின் குகையில் இருந்தால் அஞ்சித்தான் ஆகவேண்டும். அல்லாவிடில் உயிர‌ை விடவேண்டிய கட்டாய சூழல் நிகழ்ந்துவிடும்.
இவ்வாறு இராணுவ ஆதிக்கத்திலும் தமிழர்கள் வரலாறு காணமுடியா  பெரும் வெற்றியை  பெற்றுள்ள இந்த நேரத்தில்  நாங்கள் அவர்களை தூற்றி விமர்சிக்கக்கூடாது.
வடமாகாண முதல்வரின் விசேட ஊடக அறிக்கையில் என்னுடைய பதவியின் செயல்பண்புகளையும் கடப்பாடுகளையும் நான் நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் இயற்றுவேன் என்றுதான் இன்று காலை பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டேன்.என்று கூறப்பட்டுள்ளது
பொறுத்திருந்து பார்ப்போம் ஆனால் விமர்சனங்களை கைவிட்டு அ‌ன‌ைவரும் ஒற்றுமையுடன் கைகொடுப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக