வடக்கில் தமிழர் நிர்வாகமும் கிழக்கில் முஸ்லிம்களின் நிர்வாகமும்
ஒன்றிணைந்து தமிழீழம் ஒன்றினை உருவாக்க முயற்சிப்பதாக விமல் வீரவன்சவின்
கட்சியான தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணியின் கொழும்பு மாநகர சபை
உறுப்பினர் முஸ்ஸம்மில் நேற்று விடுத்துள்ள அறிக்கையில்
தெரிவித்துள்ளதாவது,
“13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கக் கூடாது என்ற பிரேரணை ஒன்று கிழக்கு
மாகாண சபையில் 15 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸினால் முன்வைக்கப்பட்ட இந்தப் பிரேரணைக்கு தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பும் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வடமாகாண சபை நிர்வாகம் வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைக்கும்
முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதற்கு கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம்
நிர்வாகமும் தமது முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாகத் தெரிய வருகிறது.
இதன் பின்னர் அவர்கள் இரு தரப்பும் இணைந்து தமிழீழம் ஒன்றினை
உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபடுவர் என்பதும் தெளிவாகிறது என்று அந்த
கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக