2009 முதல் 2012 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் 18.777 சிறுவர் துஷ்பிரயோகங்கள் ,
துர்நடத்தைகள் இடம்பெற்றுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார
அமைச்சர் திஸ்ஸ கரலியத்த நேற்று பாராளுமன்றத்தில் தகவல் வெளியிட்டார் .
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை அமர்வின் போது வாய்மூல
விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. யான ரோசி
சேனநாயக்கவினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர்
மேற்கண்ட தகவலை வெளியிட்டார் .
முன்னதாக கேள்வியெழுப்பிய ரோசி சேனாநாயக்க எம்.பி. , 2009 முதல் 2012
வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள சிறுவர் துஷ்பிரயோகம் . இவற்றால்
துர்நடத்தை பாதிக்கப்பட்டோர் ஆகிய விடயங்களை தனித்தனியாகவும் மாவட்ட
ரீதியிலும் கேட்டிருந்தார் .
இதற்குப் பதிலளித்த அமைச்சர் திஸ்ஸ கரலியத்த கூறுகையில் ,
தண்டனை சட்டக்கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 9676 சிறுவர்
துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன . அத்துடன் சிறுவர்களை வேலையில் அமர்த்தல்
சம்பவங்கள் 771 உம் பொறுப்பும் பாதுகாப்பும் அவசியமான சிறுவர்கள் 3232
பேர் என்றும் பதிவாகியுள்ளன .
மேலும் , கட்டாயக் கல்வி சட்டத்தை மீறிய சம்பவங்கள் 2278 , வேறுவிதமான
துஷ்பிரயோகங்கள் 2920 , சிறுவர் சிறுமியர் மீதான துஷ்பிரயோக
தன்மையின்படி 458 சம்பவங்களும் பதிவாகியுள்ளன .
தாய் அல்லது தந்தை வெளிநாடு செல்வதால் 2010 முதல் 2012 வரையில் 24
சிறுவர் சிறுமியர் துர் நடத்தைக்குள்ளாகியுள்ளனர் . குறிப்பாக தாய்
வெளிநாடு செல்வதாலேயே இது அதிகமாக இடம்பெறுகின்றது .
மேலும் 2010 முதல் 2013 வரையில் 1661 சிறுவர் , சிறுமியர் தாய் அல்லது
தந்தை வெளிநாடு சென்றதால் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளனர் .
இதில் தாய் வெளிநாடு சென்றதால் 748 சிறுவர்களும் 731 சிறுமியரும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்் .
தந்தை வெளிநாடு சென்றதால் 100 சிறுவர்களும் 97 சிறுமிகளும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளனர் .
2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு காலப் பகுதியில் கொழும்பு - கம்பஹா ஆகிய
மாவட்டங்களிலேயே அதிகமான சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம் பெற்றுள்ளன .
கொழும்பில் 46 சம்பவங்களும் கம்பஹாவில் 41 சம்பவங்களும்
பதிவாகியுள்ளன . மேலும் பதுளை மாவட்டத்தில் 10 சிறுவர்களும் மட்டக்களப்பில்
மூவரும் யாழ்ப்பாணத்தில் இருவரும் என துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளமை
பதிவாகியுள்ளது . கிளிநொச்சி தொடர்பில் பதிவுகள் இல்லை . இதே நேரம்
மாத்தளையில் 16 சம்பவங்களும் முல்லைத்தீவில் இரண்டு சம்பவங்களும்
நுவரெலியாவில் 5 , திருகோணமலையில் 3 , வவுனியாவில் ஒன்றும் என சம்பவங்கள்
பதிவாகியுள்ளன .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக