2014 இல் பிரேசிலில் நடக்கவிருக்கும் உலகக் கால்பந்துப் போட்டிக்குத் தகுதி
பெற்றது. பிரான்சை எதிர்த்து விளையாடிய உக்ரெய்னை 3:0 என்ற விகிதத்தில்
வெற்றிபெற்று உலகக் கால்பந்துப் போட்டி 2014 இன் தெரிவுப் போட்டியில் தகுதி
பெற்றது. சில தினங்களிற்கு முதல் உக்ரெய்னில் நடந்த போட்டியில்
உக்ரெய்னிடம் 2:0 என்ற விகிதத்தில் பிரான்ஸ் தோல்வியடைந்திருந்தமையும்
குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் பிரான்ஸ் 3:0 என்ற விகிதத்தில் வென்றால் மட்டுமே
பிரேசில் போட்டிகளிற்குச் செல்ல முடியும் என்ற இறுதி நிலையில் பிரான்சின்
உதைபந்தாட்ட வீரர்கள் அந்த வித்தையை நடாத்திக் காட்டி உள்ளார்கள். 2013ம்
மார்ச் மாதம் முதல் நடந்த தெரிவுப்போட்டிகளில் உக்ரெய்னிற்கு எதிராக
முதல்முதலாகப் பிரான்ஸ் அணியினரே புள்ளிகளைப் பதிவு செய்துள்ளார்கள். எந்த அணியிடமும் தோற்காத உக்ரெய்ன் அணியை 3:0 என்ற விகிதத்தில் வென்றுள்ளமை
குறித்து 'உதைபந்தாட்டம் ஒரு மந்திரவித்தை போன்றது. அந்த வித்தை இன்று
நிகழ்ந்துள்ளது' என பிரான்ஸ் அணியின் தெரிவாளரும் பயிற்றுனரும் முன்னாள்
அணித்தலைவருமான Didier Deschamp தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக