பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டால், செனல் 4 தொலைகாட்சியின்
ஊடகவியலாளர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று
எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த தினம்
ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ, கொழும்பு சினமன் கிராண்ட் விடுதியில் இருந்து
வெளியேறும் போது, செனல் 4 வின் ஊடகவியலாளர்கள் அவருக்கு மிகவும் அருகில்
சென்று உரையாடினர்.
யுத்தக்குற்றங்கள் தொடர்பில் அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மறுமொழி
வழங்காது ஜனாதிபதி தமது வாகனத்தில் ஏறியதுடன், அவர்களை தேனீர் விருந்துக்கு
வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
எனினும் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீறி அவர்கள் ஜனாதிபதிக்கு அருகில் சென்றமை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் அவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடுவார்களாக
இருந்தால், அவர்களை நாட்டில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்
என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக