யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு மட்டும் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமையிலிருந்து
டிசெம்பர் மாதம் 1 ஆம் திகதி வரையிலும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது
.
பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு சகல பல்கலைக்கழகங்களுக்கும்
எதிர்வரும் 9 ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் எட்டு நாட்கள் விடுமுறை
வழங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது .
இருந்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு அதிகநாட்கள் விடுமுறை
கொடுக்கப்பட்டுள்ளதுடன் , அது தொடர்பான அறிவுறுத்தல் ஒவ்வொரு
பீடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது .
இதற்கான காரணம் வெளிப்படுத்ததாத போதும் இந்த விடுமுறைக் காலத்தில்
பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் எவரும் வரவேண்டாம் என்ற அறிவுறுத்தல்
போடப்பட்டுள்ளது .
அத்துடன் நாளை 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையுடன் பல்கலைக்கழக
விடுதியில் இருக்கும் மாணவர்கள் அனைவரையும் வீடுகளுக்குச் செல்லுமாறு
விடுதிகளிலிருக்கும் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
கொடுக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக