சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

28 நவம்பர், 2013

சிவாஜிலிங்கத்தின் வீட்டு வாசலில் மலர் வளையம் வைத்து அச்சுறுத்தல். [படங்கள் இணைப்பு]

கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடமாகாண சபை உறுப்பினருமான
எம்.கே. சிவாஜிலிங்கத்தின் வீட்டு வாசலில் இன்று காலை மலர் வளையம் மற்றும் பூமாலை வைத்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது .
வல்வெட்டித்துறையில் உள்ள தனது வீட்டின் முன் மலர் வளையம் வைத்து மாலை போடப்பட்டிருந்ததை இன்று காலையில் தான் பார்த்தாகவும் இரவு வேளையில் இவ்வாறு மலர் வளையம் , பூமாலை வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார் .
 
அரச படையினரின் திட்டமிட்டு இவ் அச்சுறுத்தலை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார் .
சம்பவத்தை அறிந்த வல்வெட்டித்துறை பொலிஸார் தனது வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தியாகவும் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார் 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக