பிரிட்டன் பிரதமர் மட்டுமல்ல வேறு எந்தச் சக்தியாலும் கூட அரசை அசைக்க முடியாது '' என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர உறுதிபட தெரிவித்தார் .
பிரிட்டன் பிரதமர் இலங்கைக்கு விடுத்துள்ள எச்சரிக்கையை கடுமையாகக் கண்டித்து இவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் ,
இலங்கைக்குள்ளேயே வந்து அரசை எச்சரிக்கை செய்ய இந்த டேவிட் கமரூன்
யார் ? இவரின் இந்த ஆட்டத்திற்குக் காரணம் புலம்பெயர் தமிழர்களே என எம்மால்
உறுதியாகக் கூற முடியும் .
பிரிட்டனில் நடைபெறவிருக்கும் தேர்தலில் தமிழர்களின் வாக்குகள்
இவருக்குக் குறைந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காக அர்த்தமற்ற
குற்றச்சாட்டுகளை அரசு மீது சுமத்துவதை எம்மால் பார்த்துக் கொண்டிருக்க
முடியாது .இவருக்குத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதே நோக்கமாக
இருக்கின்றதே ஒழிய தமிழர்களின் பிரச்சினையோ , மனித உரிமை மீறல்களோ
கிடையாது . அத்துடன் இவரின் பேச்சையும் அரசு ஒருபோதும் அலட்டிக் கொள்ளாது
. இவர் மட்டுமல்ல வேறெந்த சக்தியாலும் கூட இந்த அரசை அசைக்க முடியாது
என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக