சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

20 டிசம்பர், 2013

வடக்கில் கடமையாற்ற 45 தமிழ் பெண் சிப்பாய்கள் தயார்!


45 தமிழ் யுவதிகள் புதிதாக இராணுவ பயிற்சிகளை நிறைவு செய்து கடந்த புதன்கிழமை வெளியில் வந்து உள்ளனர். இவர்கள் கடந்த ஓகஸ்ட் மாதம் இராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். பின் 03 மாத கால பயிற்சிகள் இவர்களுக்கு வழங்கப்பட்டன.
இவர்களோடு சேர்த்து 10 சிங்கள யுவதிகளும் இராணுவத்தில் சேர்க்கப்பட்டு ஒன்றாக பயிற்சிகள் வழங்கப்படடனர்.
இராணுவத்தின் வரலாற்றில் தமிழ் யுவதிகளுக்கும், சிங்கள யுவதிகளுக்கும் ஒன்றாக பயிற்சிகள் வழங்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இது ஆகும். மட்டும் அன்றி தேசிய நல்லிணக்கம், சமூக ஒருமைப்பாடு, சமாதான முன்னெடுப்பு ஆகியவற்றுக்கும் இது ஆக்கபூர்வ முயற்சியாக அமைந்தது.
இராணுவ பயிற்சிகள் மாத்திரம் அன்றி அழகியல் கலை, பூ அலங்காரம், மணப் பெண் அலங்காரம் போன்றனவும் கற்பித்துக் கொடுக்கப்பட்டு உள்ளன. இவர்கள் மட்டக்களப்பு, வவுனியா, முல்லைத்தீவு, வன்னி, கண்டி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.
இராணுவத்தின் வன்னி மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் வொனிபேஸ் பெரேரா இவ்வணியை பாராட்டிக் கௌரவித்தார்.
இவ்வணியில் தலை சிறந்த சாதனை வீராங்கனையாக திவ்யா தர்மநாயகன் தெரிவாகி உள்ளார். இவ்வணியை சேர்ந்த தமிழ் யுவதிகள் வட மாகாணத்தில் கடமைக்கு அனுப்பப்பட உள்ளார்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக