சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

12 டிசம்பர், 2013

ஒரு அ.தி.மு.க எம்.எல்.ஏ யின் (அராஜகம்) வீரம்!


• பம்பாயில் தமிழன் அடித்து விரட்டப்படட்போது வராத வீரம்! 

• பெங்களுரில் தமிழன் அடித்து விரட்டப்பட்டபோது வராத வீரம்!

• முல்லையாறு மறிக்கப்பட்டபோது வராத வீரம்!

• முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழர் கொல்லப்பட்டபோது வராத வீரம்!


ஒரு ஏழைத் தமிழனை தாக்க பொங்கியெழுந்த ஒரு அ.தி.மு.க எம்.எல்.ஏவின் வீரம்!

(ஜெயா) அம்மாவை பழித்ததால் அடித்தேன் என்கிறாயே ஜெவை கேவலப்படுத்தி சிங்கள அரசு காட்டுன் போட்டதே, அப்ப ஏன் பொங்கவில்லை? 

600 மேற்பட்ட உன் மீனவன் சுட்டுக்கொல்லப் பட்டபோது எங்கே போயிற்று உன் வீரம்? 

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எல்லாம் கோமாளிகள் என்றானே சிங்கள ராணுவ தளபதி. அப்போது உன் வீரம் ஏன் பொங்கவில்லை? 

ஒரு கம்யுனிஸ்ட் மீது கைவைத்தால் உலகில் உள்ள கம்யுனிஸ்ட் எல்லாம் குரல் கொடுப்பான் என்பது தெரியாதா? 

சிகப்பு சட்டை போட்ட புரட்சியாளர்கள் மீது கைவைத்தால் உலகப் புரட்சியாளர்கள் எல்லாம் கைகட்டி வேடிக்கை பார்ப்பார்கள் என்று நினைத்தாயா? ஏ அராஜக எம்.எல்.ஏ.வே! இன்று அரசு உன்னது ஆட்சி உன்னது காவல்துறை உன்னதாக இருக்கலாம்!

ஆனால் காலம் மாறும் இவை எல்லாம் கைமாறும். அன்று உன்னையாரும் காப்பாற்றமாட்டார்கள் என்பதை நினைவில் கொள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக