இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை .
2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தமிழர்கள் படுகொலையை தடுத்து நிறுத்தத்
தவறி விட்ட அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சரும் இப்போதைய குடியரசுத்
தலைவருமான பிரணாப் முகர்ஜி சென்னை லயோலா கல்லூரி விழாவுக்கு வருகை
தருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மாணவர் தலைவர் பிரிட்டோ உட்பட பல
மாணவர்களும் இயக்குநர் கவுதமன் உள்ளிட்டவர்களும் முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக கைது செய்யப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது
ஜனநாயக உரிமைகளை அடியோடு பறிக்கும் செயலாகும். கைது செய்யப்பட்டவர்கள்
அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யும்படி வற்புறுத்துகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக