நல்லிணக்க ஆணைக்குழு எனும் கட்டமைப்பை
நாமே ஏற்படுத்தினோம். அதனை எவ்வாறு செயற்படுத்த வேண்டும் என யாரும் எமக்கு
சொல்லித் தரத் தேவையில்லை. மற்றவர்களின் நிகழ்ச்சி நிரல் படி நல்லிணக்க
ஆணைக்குழுவின் பரிந்துரைகள் செயற்படுத்தப்படமாட்டாது என அமைச்சரவைப்
பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல
தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை
முழுமையாக செயற் படுத்த வேண்டுமென இலங்கை அரசாங்கத்தை கேட்கும். தீர்மானமொ
ன்றை ஐரோப்பிய பாராளுமன்றத்தில்
நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான
அரசாங்கத்தின் நிலைப் பாட்டை வினவியதற்குப் பதிலளித்த அமைச்சர் மேலும்
கூறியதாவது,
யுத்த காலத்தில் இடம்பெற்ற விடயங்கள்
குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கற்றுக்கொண்ட
பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு நியமிக்கப்பட்டது. இதன் அறிக்கை
கிடைத்தவுடன் பாராளுமன்றத்திலும் அது சமர்ப்பிக்கப்பட்டதோடு அதன்
பரிந்துரைகளை துரிதமாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தபோது,
அதனால் எந்த பிரயோசனமும் ஏற்படாது எனவும் அதனை அரசாங்கம் முன்னெடுக்காது
எனவும் சில தரப்பினர் விமர்சித்தனர். ஒரு பக்க சார்பாக விமர்சனங்கள்
முன்வைக்கப்பட்டன. ஆனால் நல்லி ணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை களில் 50
வீதத்துக்கும் அதிகமானவை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முன்பு நல்லிணக்க ஆணை
க்குழுவை விமர்சித்தவர்கள் அதனை ஏற்கும் நிலை இன்று உருவாகியு ள்ளது. இந்த
மாற்றத்தை நாம் வரவேற்கிறோம். இந்த ஆணைக் குழுவினால் எதுவும் நடக்காது என்ற
வர்கள் இன்று அதன் சிபார்சுகளை அமுல்படுத்துமாறு கேட்கின்றனர்.
நாம் நியமித்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை
எவ்வாறு முன்னெ டுக்க வேண்டும் என யாரும் எமக்கு சொல்லித்தரத் தேவையில்லை.
மற்ற வர்களின் நிகழ்ச்சி நிரல்படி எம்மால் செயற்பட முடியாது. இதற்கு
முன்னரும் இவ்வாறே வேறு சில நாடுகள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள்
தொடர்பில் எமக்கு உத்தரவு போட தயாராகின.
எஞ்சியுள்ள அநேகமான பரிந்துரைகளை
செயற்படுத்த அரசியலமைப்பில் திருத்தம் முன்னெடுக்க வேண்டும். மக்களின்
பங்களிப்புடனே இவற்றை முன்னெடுக்க வேண்டியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக