சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

15 பிப்ரவரி, 2013

ரஷ்யாவில் எரி நட்சத்திரம் வீழ்ந்தது : 500 பேர் காயம்!

article-2279020-17984548000005DC-968_634x343                                               
மத்திய ரஷ்யாவில் எரிநட்சத்திரம் ஒன்று நிஜமாகவே வீழந்துள்ளதால் 500க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
யெகடரின்போர்க் எனும் நகரத்தில் இந்த எரிநட்சத்திரம் நெருப்பு கோளமாக வீழந்துள்ளது. வானத்தை கிழித்துக்கொண்டு பூமிக்கு வந்ததற்கான அடையாளங்களும் வானில் நீண்ட புகை மண்டலமாக காட்சி அளிக்கின்றன.

                                               

சில கட்டிடங்களின் ஜன்னல்கள், கூரைகள் என்பன அதிர்வலைகளால் உடைந்துள்ளன. இதனாலேயே பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர். பெரிய விண்கல் ஒன்றின் பகுதி துண்டங்களே இவ்வாறு பூமியில் வீழந்துள்ளதாகவும், பூமிச்சூழலுக்குள் அவை நுழைந்துகொண்டதும் முற்றாக எரியத்தொடங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 எதிர்பாராத நேரம் இந்த எரிநட்சத்திரம் பூமியில் வீழந்துள்ளதால் உடனடியாக சம்பவ இடத்திலிருந்து 1000 க்கணக்கான பணியாளர்கள் அங்கிருந்து வெளிநகர்த்தப்பட்டுள்ளனர்.
மொஸ்கோவிலிருந்து 1500 கி.மீ தூரத்தில் இருக்கும் குறித்த செல்யாபின்ஸ்க் எனும் மாநிலம், அணு ஆராய்ச்சி மையங்கள், பல்வேறு தொழிற்சாலைகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. இங்கு தான் எரிநட்சத்திரமும் வீழ்ந்துள்ளது.

இச்சம்பவம் நடந்த போது, மக்கள் கடும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர். அக்கம் பக்கம் வீடுகளின் கதவுகளை தட்டி, அனைவரையும் நலம் விசாரித்துள்ளனர்.
இன்றிரவு பூமியை கடந்து போகும் விண்கல்லுக்கும் இந்த எரிநட்சத்திரத்துக்கும் தொடர்பு இல்லையாம்
இன்றிரவு 2012 DA14 எனும் விண்கல் பூமிக்கு மிக அருகாமையில் கடந்து செல்லவுள்ள நிலையில் ரஷ்யாவை இந்த எரிநட்சத்திரம் தாக்கியுள்ளதால், இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம் என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். ரஷ்யாவில் எரி நட்சத்திரம் வீழந்தது ஒரு தற்செயலான நிகழ்வு, அதற்கும் இன்றிரவு பூமியை கடந்து செல்லப்போகின்ற விண்கல்லுக்கும் எந்த தொடர்பு  இல்லை. ரஷ்யாவை தாக்கிய எரி நட்சத்திரம், கிழக்கிலிருந்து மேற்காக நகர்ந்தது. ஆனால் 2012 DA14 வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகர்கிறது.  அதோடு 2012 DA14 எரிகல்  50,000 கி.மீ தூரத்திலேயே வருகிறது. இன்னமும் பூமியை கடக்க இந்தோனேசிய நேரப்படி  12 மணிநேரம் இருக்கிறது என்கிறார்கள்


                                                        



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக