சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

17 பிப்ரவரி, 2013

ஈழத்தமிழினத்துக்கு எதிரான இறுதிப் போர் குறித்து சர்வதேச விசாரணை மலேசியத் தமிழர்கள் ஐ.நாவிடம் மனு



news
ஐ.நா. சபையின் சட்ட விதி 99இன் பிரகாரம் இலங்கைத்தீவில் ஈழத்தமிழினத்துக்கு எதிராக அரசினால் நடத்தப்பட்ட போர்குற்றம் மற்றும் இனஅழிப்பு குறித்து ஓர் சர்வதேச சுயாதீன விசாணையை நடத்துமாறு ஐ.நா பொதுச் செயலரை வலியுறுத்தும் நோக்கில் மலேசியத் தமிழர்கள் கோரிக்கை மனுவொன்றைக் கையளித்துள்ளனர்.
 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மலேசியத் தோழமை மையத்தின் ஒருங்கிணைப்பாளரும் சுவராம் மனித உரிமைக் கழகத் தலைவருமாகிய கா. ஆறுமுகம் தலைமையில் மலேசியத் தலைநகர் கோலாம்பூரில் உள்ள ஐ.நா நிறுவன அதிகாரிகளிடம் இந்தக் கோரிக்கை மனுவை மலேசியத் தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் கூட்டாகக் கையளித்துள்ளனர்.
 
நாடாளுமன்ற உறுப்பினர் மனோகரன் மாரிமுத்து, தமிழ் அறவாரியத் தலைவர் சி.பசுபதி, டத்தோ ஹாஜி தஸ்லீம் முகமட் இப்ராஹிம், நகராண்மைக் கழக உறுப்பினர் குணராஜ், சிலாங்கூர் நடவடிக்கை குழுத்தலைவர் சேகரன், கேமரன்மலை மலேசிய சோசியலிஸ்ட் கட்சி தலைவர் அமைச்சியப்பன், அதன் செயலாளர் சுரேஷ் குமார் ஆகியோர் அடங்கிய குழு ஐ.நா பணிமனையில் அந்த மனுவை வழங்கினர்.
 
இறுதிகட்டப் போர் உக்கிரமாகக் கட்டவிழ்த்து விடப்படிருந்த காலக்கட்டதில் கூட, இதே ஐ.நா சபை அலுவலகத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்துத் தமிழர்களைக் காக்குமாறு மனுக் கொடுத்தோம். உலகத் தமிழர்கள் அனைவரும் குரல் கொடுத்தார்கள்; மனு கொடுத்தார்கள். ஆனால் ஐ.நா சபை மக்களைக் காக்கின்ற தனது பொறுப்பிலிருந்து தவறிவிட்டது.
 
அந்த வரலாற்றுத் தவறைச் சரி செய்ய வேண்டிய மிக முக்கிய கால கட்டத்தில் ஐநா சபை இன்று இருக்கிறது. அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக இந்த அதிநவீன காலத்தில் என்ன நடக்கிறது என்று தெரிந்தும், மௌனமாக வேடிக்கை பார்த்த ஐ.நாவின் செயல் வருந்தத்தக்கது மட்டுமல்ல, அது கடுமையான கண்டனத்திற்குரியது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மலேசியத் தோழமை மையத்தின் ஒருங்கிணைப்பாளரும் சுவராம் மனித உரிமைக் கழகத் தலைவருமாகிய கா. ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக