இலங்கையில்
இடம் பெற்ற போரின் வெளித்தோற்றங்கள் மறைந்துவிட்ட போதிலும் அதற்கான மூல
காரணங்கள் இன்னமும் மறையவில்லை எனப் பிரிட்டனின் வெளியுறவு மற்றும்
பொதுநலவாய அலுவலகத்தின் நாடாளுமன்ற இராஜாங்க உதவிச் செயலாளர் அலிஸ்ரயர்
பேர்ட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட
வேண்டும். கொடூர செயல்களை விடுதலைப் புலிகள் செய்திருப்பினும் அரச படைகள்
செய்திருப்பினும் அவற்றுக்கு காரணமானவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்பட
வேண்டும். இதையே பிரிட்டன் அரசு பொறுப்புக் கூறுதல் என்றுகருதுகின்றது.
நான் வடக்குக்கும் தலைநகர்
கொழும்புக்கும் சென்றேன். தமிழர்கள் தமது வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்ப
முயல்கின்றனர். பல விடயங்கள் நடந்துள்ளன. பொருளாதாரம் வளர்கின்றது. போர்
நடந்த இடங்களில் உள்கட்டுமான வேலைகள் விருத்தியடைந்துள்ளன.
பல இடங்களில் நிலக்கண்ணிகள்
அகற்றப்பட்டுவிட்டன. உள்நாட்டில் இடம் பெயர்ந்தோர் குறைந்துள்ளனர். சிலர்
அரசு திட்டப்படி நல்லிணக்கம் செய்வதை நியாயப்படுத்துகின்றனர். ஒரு அரசியல்
தீர்வு உருவாகச் சகல தரப்பினரும் செய்ய வேண்டியது நிறையவுள்ளதாக அவர்கள்
கூறுகின்றனர்.
அரசியலில் மக்களுக்குப் பொறுப்புக் கூற
மறுத்தல் அவசியம். குற்றமிழைத்தவர்களைப் பொறுப்புக்கூற வைக்கத் தவறினால்
நீங்கள் எதிர்கால மோதலுக்கான விதையை விதைத்தவர்களாவீர்கள். காயங்களைச்
சுகப்படுத்த வேண்டிய நேரம்.
அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின்
பரிந்துரைகளை அரசு செயற்படுத்துவது இதற்கான முதற்படியாக அமையும். 2013
இலங்கைக்கு முக்கிய வருடமாகும். எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில்
நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வது பற்றி பிரிட்டன் இன்னும்
தீர்மானிக்கவில்லை.
மாநாட்டை நடத்துபவர்கள் என்றவகையில்
அவர்கள் பொதுநலவாயத்தின் விழுமியங்களான நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி, மனித
உரிமைகள் என்பவற்றை கடைப்பிடிப்பதோடு நின்றுவிடாது அவற்றை
முன்னெடுப்பவர்களாகவும் மாற வேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக