கொழும்பில் உள்ள ஈரானிய தூதரகத்துக்கு முன்னால் இன்று பௌத்த கடும் போக்காளர்களால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
புத்த பகவானின் சிலைகளை அந்நாட்டு கடைகளில் விற்கின்றமை ஈரானிய அரசால்
தடை விதிக்கப்பட்டு உள்ளது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
இத்தடையை ஆட்சேபித்தும், கண்டித்தும் நாட்டில் உள்ள பல பௌத்த அமைப்புக்களும் ஆர்ப்பாட்டத்தில் குதித்தன.
இவர்கள் மகஜர் ஒன்றை தூதுவரிடம் கையளித்தனர். விரும்புகின்ற சமயத்தை
பின்பற்றுகின்றமைக்கு சுதந்திரமாக அனுமதிக்கப்பட வேண்டும், புத்த்ர் சிலை
விற்பனை மீதான தடை நீக்கப்பட வேண்டும் என்று இம்மஜரில் கோரப்பட்டு உள்ளது.
ஆயினும் இவ்வாறு எவ்வித தடையும் ஈரானில் கிடையாது, ஊடகச் செய்தி தவறானது என இவர்களுக்கு தூதுவர் முஹமட் ஃபைசல் ரஷீன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக