யுத்தத்தால்
பெரிதும் பாதிப்புக்களை எதிர்நோக்கிய முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார்
ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக வயல் நிலங்களில்
உள்ள பயிர்கள் அழிவடைந்துள்ளமையால் குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த
விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தத்தால் தமது உடைமைகள், உறவுகளை இழந்து, கலங்கித் தவித்த
நிலையில், வன்னிப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பலர் அவலம் நிறைந்த முகாம்
வாழ்க்கையின் தொடர்ச்சியில் இருந்து மீள்குடியேற்றப்பட்டனர்.
இவ்வாறு மீள்குடியேற்றத்தின் மூலம் குறித்த பிரதேசங்களில் தமது பிரதான தொழிலான விவசாயத்தை மேற்கொள்ள வங்கிகளில் இருந்து பெற்ற கடன்கள் மூலமும், தம்மிடம் எஞ்சிய தங்க நகைகளை அடகு வைத்தும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தார்கள்.
இந்நிலையில் விதைப்புக்காலம், அறுவடைகாலம் ஆகியவற்றின்போது வன்னியில் பெய்த கனமழை, அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக முதலீட்டுச் செய்கை பண்ணப்பட்ட பெருமளவான நெல் வயல்கள் நீரில் மூழ்கி அழிவடைந்து காணப்படுகின்றன.
இதனால் வன்னி விவசாயிகள் செய்வதறியாது பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளார்கள். கடந்த முறையும் கடன் பட்டு விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு நட்டத்தை எதிர்நோக்கிய வன்னி விவசாயிகள் இம்முறையும் கன மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக நெல் வயல்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளமையால் வங்கிகளிடம் இருந்து தாம் வாங்கிய கடன்களைக் கட்டமுடியாத நிலையில் கடன் சுமையினால் மீளமுடியாத கடன்காரர்களாக மாறியுள்ளதாக வன்னி விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
6 மாத தவணையில் வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட விவசாயக் கடன்களை விவசாயிகள் திருப்பிச் செலுத்த வசதி இன்றி திருப்பிச் செலுத்த முடியாமையால் வங்கிகள், விவசாயிகளின் வீடுகளுக்கு கடன்களை அறவிடுவதற்காக தேடிச்செல்கின்றன.
இந்நிலையில் விவசாயிகள் பலர் பதில் சொல்லமுடியாத நிலையில் ஓடி ஒழிந்து தவிப்பதாகவும், தமது நிலையை யாரிடம் போய் சொல்வதென்றே தெரியாத நிலையில் தாம் பெரும் அவலப்பட்டுக் குழம்பித் தவிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமது விவசாயக் கடன்களை மானியமாக்கி தமக்கு நிவாரணம் வழங்க உரியவர்கள் உரிய கவனம் எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட வன்னி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக