சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

19 பிப்ரவரி, 2013

பாரிஸ் நகர் மேயர் பதவிக்கு வரலாற்றில் முதன் முறையாக போட்டியிடும் பெண்கள்


பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் மேயர் பதவி என்பது லண்டனின் மேயர் பதவியை விட மிக உயர்ந்த அந்தஸ்து உடையதாகும்.
தற்போது மேயராக பதவி வகிக்கும் பெர்ட்ரான்டு டிலோனோவின் பதவிக் காலம் அடுத்த வருடத்துடன் நிறைவடைகிறதையடுத்து இப்பதவிக்கு போட்டியிட்டுள்ள வேட்பாளர்கள் அனைவரும் பெண்களாவர். இது பிரெஞ்சு வரலாற்றில் எப்போதும் நடந்திராத சம்பவமாகும்.
சோசலிக் கட்சி சார்பாக தற்போது துணை மேயராக பதவி வகிக்கும் ஆன்னி ஹிடால்கோ போட்டியிடுகிறார். இவர் முதல் பெண் துணை மேயராகும்.
இவரைப் போல NKM என்றழைக்கப்படும் நதாலியா கோசிகாவும் (Nathalie Kosciusko-Morizet) போட்டியிடுகிறார். இவர் முன்னாள் ஜனாதிபதி சர்கோசியின் பிரதிநிதி பேச்சாளராக இருந்தார்.
அதேபோல நீதித்துறை அமைச்சராக பதவி வகித்த ராச்சிடா டட்டியும் இப்பதவிக்கு போட்டியிடுகிறார். தற்போது வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் செஸ்லியும் (Cécile Duflot) அடுத்த மேயர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
பிரான்சின் அரசியல் சட்டத்தில் முக்கிய பொறுப்பு வாய்ந்த மேயர் பதவியில் பெண்கள் தெரிவாவதன் மூலம் பெண்களுக்கு அதிக உரிமைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பாரிஸின் அடுத்த மேயராக ஒரு பெண் முதன்முறையாக தெரிவு செய்யப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக