சைபர் தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென இலங்கை கணனி அவசர பாதுகாப்புப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இணையத்தின் ஊடாக தகவல்களை பரிமாறிக்
கொள்ளும் போதும், தகவல்களை உள்ளீடு செய்யும் போது மிகவும் கவனமாக செயற்பட
வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.
பாதுகாப்பற்ற இணைய தளங்களுக்குள் பிரவேசிப்பதனை தவிர்க்க வேண்டும்.
வைரஸ் பாதுகாப்பு மென்பொருட்களை
காலத்துக்கு ஏற்ற வகையில் அப்டேட் செய்வதன் மூலமும் சைபர்
தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக இலங்கையின் முக்கியமான அரசாங்க இணைய தளங்கள் மீது சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக