ஜெர்மானிய நாஜிகள் நடத்திய படுகொலைகளைவிட, இலங்கை அரசு
செய்த தமிழ் இனக்கொலைகள் மேசமாவை. அதிலும் சின்னஞ்சிறு பிள்ளைகளை ஈவு
இரக்கம் இன்றிக் கொன்றுகுவித்த பின்னும், மனிதகுலத்தின் மனசாட்சி
விழிக்கவில்லை. உலகத்தின் நீதியே செத்துவிட்டதா என்று எண்ணத்
தோன்றுகின்றது. இவ்வாறு தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் வெளியாகிய செய்திகளை
அடுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நம் இருதயங்களை வெட்டிப் பிளக்கும் துன்பச் செய்தியாக, தமிழ் ஈழ
தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் இளைய மகன், 12 வயதே நிரம்பிய
பாலச்சந்திரன், சிங்கள இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட கோரச்
சம்பவத்தை, வீடியோ ஆதாரத்தோடு சனல் - 4 வெளியிட்டு உள்ளது.
பாலச்சந்திரன் கண்முன்னாலேயே ஐந்து தமிழர்களைக் கொடூரமாகச் சுட்டுக்
கொன்றுவிட்டு, பின்னர் பாலச்சந்திரனையும் சிங்கள இராணுவத்தினர் படுகொலை
செய்தனர் என்பது, அணு அளவு ஐயத்துக்கும் இடம் இன்றி உறுதிப்படுத்தப்பட்டு
உள்ளது என்று, சேனல் 4 தொலைக்காட்சியின் காணொளிக்காட்சிகள் சாட்சியம்
தருகின்றன. திட்டமிட்ட படுகொலை கிடைத்து இருக்கக்கூடிய வீடியோ
ஆதாரங்களின்படி, சிங்கள இராணுவ அதிகாரிகள் அங்கே இருந்து உள்ளனர்.
ஜெர்மானிய நாஜிகள் நடத்திய படுகொலைகளைவிட, இலங்கை படைகள் செய்த தமிழ்
இனக்கொலைகள், அதிலும் சின்னஞ்சிறு பிள்ளைகளை ஈவு இரக்கம் இன்றிக்
கொன்றுகுவித்த பின்னும், இன்னுமா மனிதகுலத்தின் மனசாட்சி விழிக்கவில்லை?
உலகத்தின் நீதியே செத்துவிட்டதா? இப்படி எத்தனை எத்தனை பாலச்சந்திரன்கள்
கொல்லப்பட்டனர்?
இந்தக் கோரமான கொலைகளுக்கு மஹிந்த ராஜபக்சவும், அவரது சகோதரர்களும் இரணுவத் தளபதிகளுமே பாத்திரவாளிகள் ஆவர்.
இதனால்தான், தமிழ் இனக்கொலை குறித்து சிங்கள் அரசு மீது, அனைத்துலக
விசாரணை நடைபெற வேண்டும் என்று கேட்கிறோம். ஜெனிவா மனித உரிமை பேரவை,
அத்தகைய முடிவை அறிவிக்க வேண்டும் என்று உலகத்தின் மனசாட்சியின் கதவைத்
தட்டுகிறோம்.
தாய்த் தமிழகத்து மக்களே, இளம் தலைமுறையினரே, இதயத்தில் குருதியைக்
கொட்டும் இக்கொடுமைகளை எண்ணிக் கொதித்து எழுவோம். மிருகங்களைவிடக் கொடிய
சிங்கள அரசைக் கூண்டில் ஏற்றுவோம். என்று .தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
|
சிந்தனைத்துளிகள்....
எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !
“ஜென்னி மார்க்ஸ்”
19 பிப்ரவரி, 2013
ஜெர்மானிய நாஜிகளை விட கொடியது சிங்கள அரசு; தேசியத் தலைவர் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலைக்கு வைகோ கண்டனம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக