சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

17 பிப்ரவரி, 2013

யாழில் ஜனாதிபதி மஹிந்த திட்டமிட்டுஅரகேற்றிய நாடகம் அம்பலம்!

 
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் விடுதலையானது, ஜனாதிபதியின் திட்டமிட்ட நாடகம் என கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அசாத் அலி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கம் யாழ்.நகரில் நேற்று ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தியது. இதன் போது கருத்து வெளிட்ட அசாத் அலி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடக்கின்றன. இங்குள்ள யாழ்ப்பாண மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்று எதிர்பார்த்தால் அவர்கள் முன்னர் இருந்ததை விட மோசமான நிலையிலேயே இருக்கின்றனர்.
இங்குள்ள தாய்மார் தமது பிள்ளைகளைக் காணவில்லை என்று தேடி அலைகின்றனர். அவர்களின் வாழ்க்கை கண்ணீராகிவிட்டது. அவர்கள் துன்பங்களுடன் வாழ்கின்றனர்.
ராஜபக்ஷ குடும்பத்தின் மூன்று பிள்ளைகளில் ஒரு பிள்ளை காணாமற் போயிருந்தால் ஷிராந்தி ராஜபக்ஷ எப்படித் துடித்திருப்பார். அந்தத் துடிப்பையே இந்தத் தமிழ் மக்களிடம் காண்கின்றோம். இந்தத் தாய்மார் சிந்துகின்ற ஒவ்வொரு துளி கண்ணீரும் இந்த அரசைக் கவிழ்க்கத்தான் போகின்றன.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டத்துக்கு யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி அங்கு ஒரு நாடகத்தை அரங்கேற்றி விட்டார்.
மேற்படி கூட்டத்துக்கு மாணவர்களின் இரண்டு தாய்மாரையும் யார் வரச் சொன்னார்கள்? அவர்கள் ஜனாதிபதியைச் சந்திக்க முன் அனுமதி பெற்றார்களா? தாய்மார் கூட்டத்துக்கு வருகிறார்கள். அவர்களின் “மைக்’ கொடுக்கப்படுகிறது.
பிள்ளைகளை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் அவர்கள் கேட்கின்றனர். உடனேயே ஜனாதிபதி கையசைத்து பிள்ளைகளை விடச் சொல்கிறார். இதுதான் நாட்டில் இப்போதைய சட்டம் என அசாத் அலி மேலும் குறிப்பிட்டார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஊடகச் செய்தியாளர் பாஸ்கரா, தமிழ் முஸ்லிம் கூட்டின் தலைவர் அஸாத் அலி, நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண ஆகியோர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக