சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

29 ஜூலை, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று நண்பகல் 12 மணிக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.(படங்கள்)




வடமாகாண சபைக்கான வேட்பு மனுக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று நண்பகல் 12 மணிக்கு தாக்கல் செய்துள்ளனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 5 மாவட்டங்களிலும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்தில் ஓய்வுநிலை நீதியரசர் கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்கினேஸ்வரன் தலைமையில் 19 பேரை உள்ளடாக்கிதாக இந்த வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இவ் வேட்புமனுக்களை முதன்மை வேட்பானர் விக்கினேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா, சித்தார்த்தன், சிவாஜிலிங்கம் ஆகியோர் தாக்கல்செய்துள்ளனர்.
கிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தலைமையில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் குகராசா ஆகியோரும் இவ் வேட்புமனுத்தாக்கல் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கூட்டமைப்பின் சார்பில் வீரசிங்கம் ஆனந்தசங்கரி, பசுபதி ஆரியரத்தினம், தம்பிராசா, சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை, கேதுரட்ணம் மினுபானந்தகுமாரி, பூபாலசிங்கம் தர்மகுலசிங்கம், கந்தசாமி திருலோகமூர்த்தி ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
 
யாழ்.மாவட்டத்தில் கூட்டமைப்பின் பட்டியலில் முதன்மை வேட்பாளராக முன்னாள் நீதியரசர் கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்கினேஸ்வரன், முன்னாள் யாழ்.மாநகர சபை ஆணையாளர் சி.வி.கே.சிவஞானம், யாழ். மாநகர சபை உறுப்பினர் பரஞ்சோதி, பொறியியலாளர் சிவயோகன், சட்டத்தரணி கேசவன் சயந்தன், பிராந்திய முகாமையாளராக இம்மானுவேல் அனல்ட், கணக்காளர் தர்மலிங்கம் சித்தார்த்தன், கனகலிங்கம் சிவாஜிலிங்கம், விரிவுரையாளர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன், சூழலியலாளர் ஐங்கரநேசன் பொன்னுத்துரை, கந்தப்பர் முத்தையாப்பிள்ளை தம்பிராஜ், இரத்தினம் ஜெயசேகரம், நல்லதம்பி விநாயகமூர்த்தி சுப்பிரமணியம், கணபதிப்பிள்ளை தர்மலிங்கம், கார்த்திகேசு நடராஜா கனரத்தினம், சபாரத்தினம் குகதாஸ், சந்திரலிங்கம் சுகிர்தன், பாலச்சந்திரன் கஜதீபன், திருமதி. அனந்தி சசிதரன் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ்த் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக வினோனோதராதலிங்கம், முதன்மை வேட்பாளரான அன்ரனி ஜெகநாதன் ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திற்கான கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் முதன்மை வேட்பாளராக ஓய்வுநிலை கோட்டக்கல்வி அதிகாரி மரியாம்பிள்ளை அன்ரனி ஜெகநாதன், வல்லிபுரம் கமலேஸ்வரன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் சார்பில் வைத்தியர் சிவப்பிரகாசம் சிவமோகன், ஆறுமுகம் சின்னத்துரை ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். ரெலோவின் சார்பில் ஆண்டியையா புவனேஸ்வரன் வீரபாகு கனகசுந்தரசுவாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் ஆசிரியை மேரி கமலா குணசீலன் நியமிக்கப்பட்டுள்ளார். புளட் கட்சியின் சார்பில் கந்தையா சிவநேசன் களமிறக்கப்பட்டுள்ளார்.
 








 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக