400 மில்லியன் ரூபாய் லஞ்சப் பணத்தை தனியாக நாமல் தனியாக சுருட்டிக்
கொண்ட விவகாரத்தில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாப ராஜபக்ஷ கொலைவெறியுடன்
இருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் சிங்கள இணையத்தளத்தில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கொழும்பு காலிமுகத்திடல் முன்பாக உள்ள வெற்றுக் காணித்துண்டொன்றை இந்திய
நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு கொடுப்பது தொடர்பில் ராஜபக்ச குடும்பம் 700
மில்லியன் ரூபாவை லஞ்சமாக கோரியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக 400 மில்லியன்
ரூபா அண்மையில் வழங்கப்பட்டுள்ளது.
ராஜபக்ச குடும்பத்தின் தரகர்களில் ஒருவரும், நகர அபிவிருத்தி அதிகார
சபையின் பணிப்பாளருமான நாலக கொடஹேவா என்பவர் இந்தப் பணத்தைப் பெற்றுக்
கொண்டபின், அதனை இன்னொரு வர்த்தகரின் ஊடாக நாமல் ராஜபக்ச பெற்றுக்
கொண்டுள்ளார். எனினும் இந்த விவகாரத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கிய
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு அவர் ஒரு சதமேனும்
கொடுக்கவில்லை.
தனக்கு வரவேண்டிய பணத்தை நாமல் தனியாக சுருட்டிக் கொண்டது தெரியவரவும்
கோத்தபாய ராஜபக்சவிற்கு கொலைவெறி தலைக்கேறியுள்ளது. இதற்கு உடந்தையாக
இருந்த நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாலக கொடஹேவாவின் பதவியை
உடனடியாக பறித்து அவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளார். மேலும் இந்த விவகாரம்
காரணமாக தற்போது கோத்தபாய மற்றும் நாமல் இடையே கடும் முறுகல் நிலை
ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்திய நிறுவனத்திடமிருந்து வரவேண்டியுள்ள எஞ்சிய தொகையை
தான் மட்டும் தனியாக சுருட்டிக் கொள்வதற்கான நடவடிக்கைகளையும் கோத்தபாய
ராஜபக்ச மேற்கொண்டுள்ளதாகவும் சிங்கள இணையத்தள செய்தியில் மேலும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக